Home » » வரலாற்று வெற்றியுடன் மேற்கிந்திய தீவுகள் டெஸ்ட் தொடரை சமநிலை செய்த இலங்கை

வரலாற்று வெற்றியுடன் மேற்கிந்திய தீவுகள் டெஸ்ட் தொடரை சமநிலை செய்த இலங்கை


பார்படோஸில் செவ்வாய்க்கிழமை (26) நடைபெற்று முடிந்திருக்கும் சுற்றுலா இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியில், இலங்கை அணி 4 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளதுடன் மூன்று போட்டிகள் கொண்ட தொடரையும் 1-1 என சமநிலை செய்திருக்கின்றது.
இதேவேளை, பகலிரவு ஆட்டமாக நடைபெற்ற இந்த டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்ற இலங்கை அணி மேற்கிந்திய தீவுகளின் பார்படோஸ் நகரில் (பிரிட்ஜ்டவ்ன்) நடைபெற்ற டெஸ்ட் போட்டியொன்றில் வெற்றி பெற்ற முதல் ஆசிய அணியாகவும் வரலாறு படைத்திருக்கின்றது.
திங்கட்கிழமை (25) இடம்பெற்ற இப்போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டத்தில், இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் மேற்கிந்திய தீவுகளை இரண்டாம் இன்னிங்ஸில்  நிர்மூலம் செய்திருந்த காரணத்தினால் அவர்கள் 93 ஓட்டங்களுடன் கட்டுப்படுத்தப்பட்டு, ஏற்கனவே இடம்பெற்ற இரண்டு அணிகளினதும் முதல் இன்னிங்சுகளின் அடிப்படையில் போட்டியின் வெற்றி இலக்காக இலங்கை அணிக்கு 144 ஓட்டங்கள் நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.
மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மேற்கிந்திய தீவுகள் அணி 1-0 என முன்னிலை வகித்த காரணத்தினால், மூன்றாவதும் கடைசியுமான டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று இந்த தொடரை சமநிலைப்படுத்தும் நோக்கோடு தமது இரண்டாம் இன்னிங்சை ஆரம்பித்த இலங்கை அணி ஆட்டத்தின் மூன்றாம் நாள் நிறைவில் 81 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்து இலக்கு தொடும் தமது பயணத்தில் சற்று பின்னடைவான நிலையில் காணப்பட்டிருந்தது. களத்தில் குசல் மெண்டிஸ் 25 ஓட்டங்களுடனும், தில்ருவான் பெரேரா ஒரு ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காது நின்றிருந்தனர்.
ஆட்டத்தின் நான்காம் நாளில் 63 ஓட்டங்கள் தேவையாக இருக்க 5 விக்கெட்டுக்களை கையில் வைத்துக்கொண்டு இலங்கை அணி வெற்றி இலக்கை நோக்கி துடுப்பாடத் தொடங்கியது. எனினும், நான்காம் நாளின் முதல் ஓவரை வீசிய மேற்கிந்திய தீவுகளின் ஜேசன் ஹோல்டர் இலங்கை அணியின் நம்பிக்கைக்குரிய வீரரான குசல் மெண்டிஸின் விக்கெட்டை LBW முறையில் கைப்பற்றினார். இந்த விக்கெட்டுக்காக குசல் மெண்டிஸ் மூன்றாம் நடுவரின் பரிசீலனையை நாடியிருந்த போதும் அது கைகொடுக்காமல் போக 25 ஓட்டங்களுடன் மைதானத்தை விட்டு வெளியேறினார்.
நான்காம் நாளின் ஆரம்பத்தில் பறிபோன மெண்டிஸின் விக்கெட் இலங்கை அணிக்கு அதிர்ச்சியாகவும், மேற்கிந்திய தீவுகள் அணிக்கு மகிழ்ச்சியாகவும் மாறியிருந்தது. இதனையடுத்து, போட்டியின் மூன்றாம் நாளில் சிக்ஸர் ஒன்றை தடுக்க முயன்ற போது காயத்துக்குள்ளாகிய ஆரம்ப துடுப்பாட்ட வீரரான குசல் பெரேரா, மருத்துவர்கள் துடுப்பாட முடியும் என்று ஆலோசனை வழங்கியதனால் 8 ஆம் இலக்க வீரராக களம் நுழைந்தார்.
களத்தில் இருந்த தில்ருவான் பெரேராவுடன் 7 ஆம் விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்த குசல் பெரேரா தமது அணியில் ஏனைய சிறப்பு துடுப்பாட்ட வீரர்கள் யாரும் இல்லை என்பதனால் மிகவும் பொறுமையான முறையில் இலங்கை அணிக்கு ஓட்டங்கள் சேர்க்கத் தொடங்கினார்.
இரண்டு பெரேராக்களினதும் 7 ஆம் விக்கெட்டுக்கான நிதானமான இணைப்பாட்டம் (63) கைகொடுக்க இலங்கை அணி, 40.2 ஓவர்களில் ஆறு விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து போட்டியின் வெற்றி இலக்கான 144 ஓட்டங்களை அடைந்தது.
இலங்கை அணியை பிரபல்யமான டெஸ்ட் வெற்றி ஒன்றுக்கு வழிநடாத்திய குசல் பெரேரா 28 ஓட்டங்களையும், தில்ருவான் பெரேரா 23 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழக்காது களத்தில் இருந்தனர்.
மறுமுனையில், இலங்கை அணியை இரண்டாம் இன்னிங்ஸில் தனது வேகத்தின் மூலம் அச்சுறுத்திய மேற்கிந்திய தீவுகள் அணியின் அணித்தலைவர் ஜேசன் ஹோல்டர் 5 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தார். ஹோல்டருக்கு இந்த இன்னிங்சுடன் சேர்த்து போட்டியில் மொத்தமாக 9 விக்கெட்டுக்களை கைப்பற்றிய காரணத்திற்காகவும்,  துடுப்பாட்டத்தில் சிறப்பாக செயற்பட்ட காரணத்திற்காகவும் போட்டியின் ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. இதேவேளை, இத்தொடர் முழுவதும் துடுப்பாட்டத்தில் ஜொலித்த சேன் டோவ்ரிச் தொடரின் ஆட்ட நாயகனுக்கான விருதைப் பெற்றுக் கொண்டார்.
முன்னணி வீரர்களின் காயங்கள், சிரேஷ்ட துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான அஞ்செலோ மெதிவ்ஸ் நாடு திரும்பியமை, பந்து சேதப்படுத்தல் விவகாரத்தில் அணித்தலைவர் தினேஷ் சந்திமாலுக்கு போட்டித்தடை விதிக்கப்பட்டமை, மழையினால் இரண்டாம் டெஸ்ட் போட்டியின் வெற்றி வாய்ப்பு நழுவிப்போனமை போன்ற விடயங்களால் மிகவும் அழுத்தங்களுக்கு உள்ளாகிய நிலையிலேயே சுரங்க லக்மால் தலைமையிலான இலங்கை அணி இந்த பகலிரவு டெஸ்ட் போட்டியில் வெற்றியடைந்து சாதித்து காட்டியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
மேற்கிந்திய தீவுகள் உடனான இந்த டெஸ்ட் சுற்றுப் பயணத்தை முடித்திருக்கும் இலங்கை அணி அடுத்த மாதம் தமது சொந்த மண்ணில் இடம்பெறவுள்ள இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் தென்னாபிரிக்க அணியுடன் மோதவுள்ளது.
ஸ்கோர் விபரம்

Full Scorecard


West Indies
204/10 & 93/10
(31.2 overs)
Result

Sri Lanka
154/10 & 144/6
(40.2 overs)

Srilanka won by 4 wickets

West Indies’s 1st Innings
BATTINGRB
Devon Smithc D.De.Silva b S.Lakmal25
Kraig Brathwaitec D.Gunathilake b S.Lakmal214
Keiran Powellc K.Mendis b L.Kumara410
Shai Hopec K.Mendis b K.Rajitha1149
Roston Chaseb K.Rajitha1430
Shane Dowrichlbw by L.Kumara71132
Jason Holderc D.Perera b K.Rajitha74123
Devendra Bishooc K.Mendis b L.Kumara013
Kemar Roachnot out1117
Miguel Cumminsc K.Mendis b D.Perera218
Shanon Gabrielc N.Dickwella b L.Kumara26
Extras
11 (b 4, lb 6, w 1)
Total
204/10 (69.3 overs)
Fall of Wickets:
: 1-3 (D Smith, 0.6 ov), 2-8 (K Brathwaite, 4.3 ov), 3-8 (K Powell, 5.2 ov), 4-24 (R Chase, 13.4 ov), 5-53 (S Hope, 23.1 ov), 6-168 (S Dowrich, 55.5 ov), 7-183 (D Bishoo, 61.4 ov), 8-189 (J Holder, 62.6 ov), 9-201 (M Cummins, 68.1 ov), 10-204 (S Gabriel, 69.3 ov)
BOWLINGOMRWE
Suranga Lakmal1955222.74
Lahiru Kumara23.355842.49
Kasun Rajitha1716834.00
Dilruwan Perera1031611.60
Sri Lanka’s 1st Innings
BATTINGRB
Kusal Pererac S.Dowrich b K.Roach09
Mahela Udawattelbw by K.Roach418
Danushka Gunathilakelbw by J.Holder2973
Kusal Mendisb S.Gabriel2259
Dananjaya De Silvalbw by S.Gabriel810
Roshen Silvac S.Dowrich b S.Gabriel1153
Niroshan Dickwellac D.Smith b J.Holder4272
Dilruwan Pereranot out1148
Suranga Lakmalc (sub)K.Paul b J.Holder04
Kasun Rajithab J.Holder011
Lahiru Kumara(runout) J.Holder00
Extras
27 (b 9, lb 14, nb 3, w 1)
Total
154/10 (59 overs)
Fall of Wickets:
1-0 (KJ Perera, 2.3 ov), 2-16 (M Udawatte, 6.3 ov), 3-75 (K Mendis, 26.1 ov), 4-81 (D Gunathilaka, 27.2 ov), 5-85 (D de Silva, 30.1 ov), 6-118 (R Silva, 42.6 ov), 7-147 (N Dickwella, 53.4 ov), 8-147 (S Lakmal, 55.2 ov), 9-150 (K Rajitha, 57.6 ov), 10-154 (L Kumara, 58.6 ov)
BOWLINGOMRWE
Kemar Roach1253022.50
Shanon Gabriel1525233.47
Miguel Cummins1562901.93
Jason Holder1681941.19
Devendra Bishoo10101.00
West Indies’s 2nd Innings
BATTINGRB
Kraig Brathwaitec M.Udawatta b S.Lakmal29
Devon Smithb S.Lakmal04
Kieran Powellc N.Dickwella b L.Kumara714
Shai Hopeb L.Kumara02
Roston Chasec K.Perera b S.Lakmal513
Shane Dowrichc S.Lakmal b K.Rajitha1631
Jason Holderc K.Mendis b K.Rajitha1530
Devendra Bishoob K.Rajitha02
Kemar Roachnot out2337
Miguel Cumminsc D.De.Silva b D.Perera1437
Shanon Gabriel(runout) (K.Rajitha/N.Dickwella)69
Extras
5 (lb 4, w 1)
Total
93/10 (31.2 overs)
Fall of Wickets:
1-1 (D Smith, 0.5 ov), 2-8 (K Brathwaite, 2.6 ov), 3-9 (S Hope, 3.3 ov), 4-14 (R Chase, 6.4 ov), 5-14 (K Powell, 7.2 ov), 6-41 (S Dowrich, 15.4 ov), 7-41 (D Bishoo, 15.6 ov), 8-56 (J Holder, 19.1 ov), 9-82 (M Cummins, 28.2 ov), 10-93 (S Gabriel, 31.2 ov)
BOWLINGOMRWE
Suranga Lakmal11.332532.21
Lahiru Kumara8.213123.78
Kasun Rajitha812032.50
Dilruwan Perera3.301313.94
Sri Lanka’s 2nd Innings
BATTINGRB
Danushka Gunathilakec D.Bishoo b J.Holder2130
Mahela Udawattalbw by K.Roach06
Dananjaya De Silvab J.Holder1729
Kusal Mendislbw by J.Holder2544
Roshen Silvac D.Smith b J.Holder17
Niroshan Dickwellab J.Holder615
Dilruwan Pereranot out2368
Kusal Pereranot out2843
Extras
23 (b 8, lb 15)
Total
144/6 (40.2 overs)
Fall of Wickets:
1-9 (M Udawatte, 2.3 ov), 2-30 (D Gunathilaka, 8.1 ov), 3-48 (D de Silva, 12.5 ov), 4-50 (R Silva, 14.5 ov), 5-74 (N Dickwella, 18.4 ov), 6-81(K Mendis, 24.6 ov)
BOWLINGOMRWE
Kemar Roach1013313.30
Shanon Gabriel912602.89
Jason Holder14.244152.89
Miguel Cummins611702.83
Devendra Bishoo10404.00
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |