Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

பாண்டிருப்பு ஸ்ரீ பெரியதம்பிரான் ஆலய மகாகும்பாபிஷேகம்

(செ.துஜியந்தன் )
பாண்டிருப்பு அருள்மிகு ஸ்ரீ பெரியதம்பிரான் அலயத்தின் புனராவர்த்தன குண்டபசஷ அஷ்டபந்தன பிரதிஷ்டா மகா கும்பாபிஷேகம் எதிர்வரும் முதலாம் திகதி நடைபெறவுள்ளது.
ஆலய பூர்வாங்க கிரியாரம்பம் 29 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஆரம்பமாகவுள்ளது. பாண்டிருப்ப ஸ்ரீ பெரியதம்பிரான் அலயத்தின் புனரமைப்பு பணிகள் கடந்த பல வருடங்களாக நடைபெற்றுவந்தன. இந்நிலையில் எதிர்வரும் ஜீலை 01 ஆம் திகதி காலை 9.30 மணி தொடக்கம் 10.30 மணிவரையுள்ள முகூர்த்த நாளில் மகாகும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.

30 ஆம் திகதி சனிக்கிழமை எண்ணெய்க்காப்பு சாத்து; நிகழ்வு நடைபெறும் தொடர்ந்து பத்து தினங்கள் மண்டலாபிஷேகம் விசேட பூசை  நடைபெற்று 11 ஆம் திகதி புதன்கிழமை பாற்குடபவனியும், சங்காபிஷேகமும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இவ் ஆலயத்தின் வருடாந்த திருச்சடங்கு ஆகஸ்ட் முதலாம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Post a Comment

0 Comments