Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மின் கம்பங்களில் ஏறுவதற்கு ஏணிக்கு பதிலாக இரும்பிலான பாதணி வடிவமைப்பு


மின்சார இணைப்புகளை புதுப்பித்தலுக்கும், மின்கம்பங்களின் ஊடாக ஏறுவதற்கும் ஏணி ஒன்று அவசியமாகும். எனினும் அதனை எடுத்துச் செல்வதற்காக லொறி ஒன்றும், இரண்டு ஊழியர்களும் தேவைப்படும். அதற்கு மாற்றுவழியாக அட்டன் இலங்கை மின்சார சபையின் பாவனையாளர் மத்திய நிலையத்தின் மின் பொறியியலாளர் நிமல் சமரகோன், இரும்பிலான பாதணி ஒன்றை வடிவமைத்துள்ளார்.
கொங்கறீட் தூண் ஒன்றினூடாக ஏறுவதற்கும், மரத்திலான கம்பங்களில் ஏறுவதற்கும் ஏணிக்கு மாறாக இரும்பு கம்பிகள் பொருத்தப்பட்ட பாதணிகளை அமைத்திருக்கின்றார்.
கொங்கறீட் தூண் மற்றும் கம்பங்களின் அகலத்திற்கு ஏற்ப இந்த பாதணிகளை மாற்றிக்கொள்ள முடியும்.
அதனூடாக ஏணி தேவைப்படாத நிலையில், குறித்த பாதணிகளை பயன்படுத்தி மின்கம்பங்களில் ஏறி திருத்த பணிகளை மேற்கொள்ள முடியும். மேலும் இந்த முறை ஊடாக ஆளணி மற்றும் செலவீனங்களும் இல்லாமல் போகின்றன.
இதனை எடுத்துச் செல்வதற்கும் வாகனம் அவசியப்படுவதில்லை. குறிப்பாக வாகனங்கள் செல்ல முடியாத இடங்களுக்குக்கூட இந்த பாதணியை எடுத்துச் சென்று பயன்படுத்த முடியும்.

Post a Comment

0 Comments