Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பு- ஆயித்தியமலையில் "தலவிருட்சம்" நூல் வெளியீடு

(விளாவூர் நிருபர்)

மட்டக்களப்பு - மண்முனை மேற்கு பிரதேசத்திற்குட்பட்ட ஆயித்தியமலை ஸ்ரீ முத்து மாரியம்மன் ஸ்ரீ கதிரவேலாயுத சுவாமி ஆலய பரிபாலன சபையினரால் "தலவிருட்சம்" நூல் 25.06.2018 திங்கட்கிழமை இரவு 8 மணிக்கு வெளியீட்டு நிகழ்வு ஆலய பரிபாலன சபைத் தலைவர் இ.விநாயகமூர்த்தி தலைமையில்  இடம்பெற்றது.

இந்த நூல் ஆலயம் ஆரம்பிக்கப்பட்டு 60 ஆண்டுகள் கடந்ததினை நினைவூட்டும் வகையில் வைரவிழா நூலாக வெளியீடப்பட்டது.

இந்த "தலவிருட்சம்" நூல் வெளியீட்டு நிகழ்விற்கு முதன்மை அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட  பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.ஸ்ரீநேசன் மற்றும் ச.வியாழேந்திரன் ஆகியோரும்.
சிறப்பு அதிதிகளாக மண்முனை மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் செ.சண்முகராஜா ,
மட்டக்களப்பு மேற்கு வலயக்கல்விப் பணிப்பாளர் அகிலா கனகசூரியம் ஆகியோரும்.
கௌரவ அதிதிகளாக
மண்முனை மேற்கு பிரதேச சபை உறுப்பினர்களான தைரியராசா ஜெயந்தினி, நாகராசா பத்மராகினி .
கிராம உத்தியோகத்தர் ப.சிவநாதன் ஆகியோரும்.
அழைப்பு அதிதிகளாக
ஆயித்தியமலை கிராமத்திற்கு அண்மையில் இருக்கின்ற ஆலயங்களின் நிருபாக சபையினரும் இந்த நிகழ்விற்கு அதிதிகளாக வருகை தந்திருந்தனர்.







Post a Comment

0 Comments