குருநாகல் - தம்புள்ளை பிரதான வீதி கல்கிரியாகம பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவற்துறை இதனை தெரிவித்துள்ளது.
நேற்று இரவு இடம்பெற்றுள்ள குறித்த விபத்தில் 18 வயதுடைய இளைஞரே உயரிழந்துள்ளார்.
கட்டுநாயக்க தொடக்கம் கல்முனை வரை பயணிக்கும் இலங்கை போக்குவரத்து சபைக்கு உரித்தான பேருந்து, கல்கிரியாகம பிரதேசத்தில் தேநீருக்காக நிறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், மீண்டும் பயணிப்பதற்கு தயாரான நிலையில் பேருந்தினை பின் நோக்கி எடுத்துள்ளதனை தொடர்ந்து, பேருந்து மிதி பலகையில் இருந்த இளைஞர் பேருந்துக்கும் மரம் ஒன்றிற்கும் சிக்குண்டு உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
சம்பவம் தொடர்பில் பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

0 Comments