Advertisement

Responsive Advertisement

மட்டக்களப்பு ஓந்தாச்சிமடத்தில் இரு ஆலயங்கள் உடைக்கப்பட்டு திருட்டு !!

களுவாஞ்சிகுடி - ஒந்தாச்சிமடம் ஸ்ரீகற்பக விக்னேஸ்வரர் ஆலயத்திலும், அதன் அருகில் அமைந்துள்ள அம்மன் ஆலயத்திலும் பணம் மற்றும் தங்க நகைகள் களவாடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக ஆலயங்களின் நிர்வாக சபையினர் குறிப்பிட்டுள்ளனர்.

அம்மன் ஆலயத்தின் கதவு திரிசூலத்தால் உடைக்கப்பட்டுள்ளதுடன், கூரை ஓடுகளும் கழற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் அம்மனுடைய கழுத்திலிருந்த இருந்த தங்க பொட்டுத்தாலி உட்பட பல நகைகளும் திருடப்பட்டுள்ளன. இதேவேளை பிள்ளையார் ஆலயத்தில் தெற்கு வாசல் கதவு உடைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று காலை சம்பவ இடத்திற்கு விரைந்த களுவாஞ்சிகுடி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.






Post a Comment

0 Comments