மட்டக்களப்பு அம்பாறை ஆகிய மாவட்டங்களில் கடும் உஷ்ணம் நிலவுகின்றது. இதன்காரணமாக பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம்கொடுப்பதோடு தோல் நோய்களின் தாக்கத்திற்கும் உள்ளாகிவருகின்றனர்.
தற்போது நிலவும் கடும் வெயிலினால் சிறுவர்கள், முதியோர்கள், கர்ப்பிணித்தாய்மார்கள் பல்வேறு உடல் உபாதைகளுக்கு முகம்கொடுத்துள்ளனர். இங்குள்ள வைத்தியசாலைகளின் வெளிநோயளர் பிரிவுகளில் அதிகளவிலான மக்கள் சிகிச்சைபெற்றுச் செல்கின்றனர்.
கடும் உஷ்ணம் காரணமாக தலையிடி, வயிற்றோட்டம், தொண்டைநோவு, மஞ்சள் காமாலை, காய்ச்சல், தோல்நோய், கண்நோய் என்பவற்றினால் அதிகம் பாதிக்கப்பட்டுவருகின்றனர். இதேவேளை உஷ்ணத்தை தணித்துக்கொள்ள மக்கள் குளிர்பானக் கடைகளை நோக்கி படையெடுத்துச் செல்கின்றனர்.
மட்டு அம்பாறையின் பிரதானவீதிகளில் ஓரத்தில் இளநீர், நொங்கு, சர்பத் போன்ற குளர்பானக்கடைகளும் அதிகளவில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments