Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

சந்தேக நபர் சுட்டுக்கொல்லப்பட்டமைக்கு எதிரான மங்களவின் சர்ச்சைக்குறிய டுவிற்


மாத்தறை நகரில் நகைக் கடையொன்றை கொள்ளையிட சென்ற போது இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தை தொடர்ந்து கைது செய்யப்பட்டிருந்த சந்தேக நபர்களில் ஒருவர் பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்டமையை ஏற்றுக்கொள்ள முடியாது என நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

தனது டுவிற்றர் பக்கத்தில் இது தொடர்பாக அவர் பதவிவேற்றமொன்றை மேற்கொண்டுள்ளார்.

அதில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்டமையை சந்தேக நபரை கொலை செய்வதினூடாக நியாயப்படுத்திவிட முடியாது. இது நல்லாட்சியே ஒழிய வேறு ஆட்சியல்ல என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மாத்தறை நகரில் நகைக் கடை கொள்ளைக்கு சென்ற குழுவினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்திருந்ததுடன் அதன்பின்னர் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் ஒருவர் பொலிஸாருக்கு தனது ஆடை பையை காட்டுவதற்காக சென்ற போது மறைத்து வைத்திருந்த கைக் குண்டை பொலிஸார் மீது வீச முற்பட்ட போது நேற்றைய தினம் பொலிஸாரினால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்நிலையிலேயே அமைச்சர் இவ்வாறாக டுவிற்றரில் குறிப்பிட்டுள்ளார். -(3)

Post a Comment

0 Comments