பட்டிருப்பு வலயக் கல்வி அலுவலகத்தின் பிரதி நிர்வாக கல்விப் பணிப்பாளராக, களுதாவளையைச் சேர்ந்த வி.மயில்வாகனம் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் கடந்த 32 வருடங்களாக கல்விச் சேவை புரிந்து வருகின்றார். 1986 இல் விஞ்ஞானப் பட்டதாரியாகி ஆசிரியர் நியமனம் பெற்று ,கல்முனை முஹமட் மகளீர் கல்லூரி, கார்மேல் பற்றிமா கல்லூரி ,களுதாவளை மகாவித்தியாலயம் ஆகியவற்றில் ஆசிரியராக கடமை புரிந்துள்ளார்.
1999 இல் இலங்கை கல்வி நிர்வாக சேவையில் இணைந்து கொண்ட இவர், பட்டிருப்பு வலயத்தில் கணித பாடத்துக்குரிய உதவிக் கல்விப் பணிப்பாளராகவும் பிரதி திட்டமிடல் கல்விப் பணிப்பாளராகவும் கடமையாற்றியுள்ளார்.
2004 தொடக்கம் 2008 ஆண்டு வரை கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தில் பிரதி திட்டமிடல் கல்விப் பணிப்பாளராகவும் 2009 இல் இருந்து 2011 வரையான காலப்பகுதியில், பட்டிருப்பு கல்வி வலயத்தில் பிரதி நிர்வாக கல்விப் பணிப்பாளராகவும் 2012 தொடக்கம் 2018 வரை கல்முனை கல்வி வலயத்தில் பிரதி நிர்வாக கல்விப் பணிப்பாளராகவும் கடமையாற்றியுளார். இடைப்பட்ட காலத்தில் கல்முனை தமிழ்ப் பிரிவு கோட்டக் கல்விப் பணிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.
களுதாவளை மகாவித்தியாலயத்தில் க.பொ.த உயர்தரத்தில் விஞ்ஞானப் பிரிவினை ஆரம்பிப்பதற்கு முன்னோடியாகவும் திகழ்ந்துள்ளார்.
தற்போது பட்டிருப்பு வலய கல்வி அலுவலகத்தில் பிரதி நிர்வாக கல்விப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இலங்கை கல்வி நிர்வாக சேவையில் பதினெட்டு வருடங்கள் அனுபவம் வாய்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
0 Comments