Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

பாதைக்காக கொட்டும் மழையிலும் வீதிக்கு இறங்கிய மக்கள்


கண்டி நுவரெலியா பிரதான பாதையில் இரட்டைபாதை நகரத்தில் இருந்து தொரகல கிராமம் நீவ்பீகொக் தோட்டம் ஊடாக கொத்மலைக்கும் கொத்மலை மகாவெயிசாயவிற்கும் செல்லும் பிரதான 17 கிலோ மீற்றர் வீதி சுமார் 40 வருடங்களாக திருத்தபடாது காணப்படுகின்றன.

அத்துடன் பாதையின் பாலத்தின் ஒரு பகுதி உடைந்து பல மாதங்களாகியும் திருத்தபடவில்லை அதனால் அதனை திருத்தி தருமாறு கோரி இரட்டைபாதை நகரத்தில் கண்டி நுவரெலியா பிரதான பாதை மறித்து பாரிய போராட்டம் ஒன்று இன்று (21) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த போராட்த்தில் கிராமத்து மற்றும் தோட்ட மக்கள் உட்பட பெருந்திரளான மக்கள் கலந்துக் கொண்டனர். இதனால் கண்டி நுவரெலியா பிரதான பாதையின் போக்குவரத்துகளுக்கு தடையும் ஏற்பட்டிருந்தன. இந்த போராட்டம் கொட்டும் மழையிலும் நடைபெற்றது. -(3)32974810_1721926837877026_4592686427434647552_n 33022004_1721926707877039_2546894161756291072_n 33058899_1721926881210355_4160675621548064768_n

Post a Comment

0 Comments