வவுனியா மாவட்ட செயலகத்தின் முன்பாக வேலையற்ற பட்டதாரிகள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை இன்று முன்னெடுத்துள்ளனர்.
35 வயதிற்கு மேற்பட்டவர்களை நியமனங்களில் உள்ளீர்க்க வேண்டும், 2017 வேலையற்ற பட்டதாரிகள் அனைவரையும் உள்வாங்குதல் வேண்டும், பட்ட சான்றிதழ் இறுதித் திகதியினடிப்படையில் அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனங்கள் வழங்கப்படுதல் வேண்டும் எனும் கோரிக்கைகளை முன்வைத்தும், வேலையற்ற பட்டதாரிகளால் கொழும்பில் நடைபெற்ற கவனயீர்ப்பு போராட்டத்திற்கு நீர் வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டதைக் கண்டித்தும் வவுனியா மாவட்ட செயலத்திற்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது நியமன இழுத்தடிப்பு மாகாணசபைத் தேர்தலுக்காகவா…?, வழங்கப்பட்ட வாக்குறுதிகள் எங்கே..?, 143 நாள் வீதியில் இருந்தோம் எம் தலைவிதி மாறவில்லை, நியமனம் வழங்குவதை துரிதப்படுத்து, நல்லாட்சி என்ன மெல்லக் கொல்லும் விசமா..?, எமக்கே இந்திலையாயின் எதிர்கால சந்ததியினருக்கு..?, பட்டதாரிகளை தெரிவில் விட்ட நல்லாட்சி, பேச்சுவார்த்தை போதும் நியமனம் வழங்கு.., வெற்றிடங்கள் ஏராளம் பட்டதாரிகள் வீதியோரம்., பட்டதாரிகளின் மீது நீர்த்தாரைப்பரயோகம் நியாயமானதா போன்ற பல்வேறு கோசங்கள் எழுதப்பட்ட பதாதைகளை தாங்கியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.



N5
0 Comments