Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

குடாநாட்டை ஆட்டிப் படைத்த ஆவா குழுவின் முக்கிய நபர் சிக்கினார்!

யாழ்ப்பாணத்தில் பொதுமக்களை பீதிக்குள்ளாக்கி வந்த ஆவா குழுவின் மிகமுக்கிய உறுப்பினரான போல் வெனிஸ்டன் என்பவரை கைது செய்துள்ளதாக யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்தனர். யாழ்.நகரப் பகுதியில் மறைந்திருத்த போது, பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கமையே நேற்று அதிகாலை பொலிஸார் இவரை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர் கோப்பாய் பகுதியைச் சேர்ந்தவர் எனவும் வாள்வெட்டு, கொள்ளைகளுடன் தொடர்பு பட்டவர். பொலிஸார் பல தடவைகள் அவரை கைது செய்ய நடவடிக்கை எடுத்தபோதும், அவர் தப்பி வந்துள்ளார். இந் நிலையிலேய‍ே நேற்று குறித்த இடத்தை சுற்றிவளைத்த பொலிஸார் அவரை கைது செய்துள்ளனர்.

Post a Comment

0 Comments