Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

காஸா எல்லை ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது இஸ்ரேல் துப்பாக்கி சூடு – ஆயிரத்திற்னுகும் அதிகமானவர்கள் காயம்


காஸா எல்லையில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள பாலஸ்தீனியர்கள் மீது வெள்ளிக்கிழமை இஸ்ரேலிய படையினர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதில் சுமார் 1000ற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.

காஸா 25 மைல் எல்லைக்காவல் வேலிக்கு அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள பாலஸ்தீனியர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகம் காரணமாக 82 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என பாலஸ்தீன மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அதேவேளை கண்ணீர்புகைபிரயோகம் உட்பட ஏனைய பாதிப்புகளை எதிர்கொண்ட800 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் பாலஸ்தீன மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Post a Comment

0 Comments