பொதுமக்கள் மீது சிரியா அரசாங்கம் மேற்கொண்ட இரசாயன ஆயுத தாக்குதலிற்கு பதிலடியாக இந்த தாக்குதல்களிற்கான உத்தரவை பிறப்பித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
சிரியாவின் சர்வாதிகாரி பசார் அல் அசாத்தின் இரசாயன ஆயுத திறனுடன் தொடர்புபட்ட நிலைகள் மீது துல்லியமான தாக்குதல்களை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டுள்ளேன் என அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா டொம்ஹவ்க் ஏவுகணை பயன்படுத்தி பல தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது என அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
சனிக்கிழமை அதிகாலைக்கு முன்பாக சிரியா தலைநகர் டமஸ்கஸில் ஆறு குண்டுவெடிப்புச்சத்தங்கள் கேட்டதாகவும் கரும்புகைமண்டலத்தை காணமுடிவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிரியாவின் விஞ்ஞான ஆராய்ச்சி மையம் அமைந்துள்ள பகுதியை இலக்குவைத்து பல தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. விஞ்ஞான ஆராய்ச்சி மையத்திலேயே சிரிய அரசாங்கம் இரசாயன ஆயுதங்களை உற்பத்தி செய்கின்றது என அமெரிக்கா குற்றம்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது
0 Comments