Home » » தப்புவாரா ரணில்? - இன்றிரவு தெரியவரும்!

தப்புவாரா ரணில்? - இன்றிரவு தெரியவரும்!

பிரதமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு எதி­ராக கூட்டு எதிரணி­யால் முன்­வைக்­கப்பட்­டுள்ள நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னம் மீது இன்று இரவு 9.30 மணிக்­கு வாக்­கெ­டுப்பு நடக்­க­வுள்­ளது. ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னம் மகிந்த அணி­யால் சமர்­பிக்­கப்­பட்­டது. இன்று காலை 9.30 மணிக்கு தீர்­மா­னம் மீதான விவா­தம் ஆரம்­ப­மா­கும். அத­னால் நாடா­ளு­மன்­றத்­தின் பாது­காப்­பும் பலப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.
காலை­யில் ஆரம்­ப­மா­கும் விவா­தத்­தின் மீது இரவு 9.30 மணிக்கு வாக்­கெ­டுப்பு நடத்­தப்­ப­டும். நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் ஒவ்­வொ­ரு­வ­ரின் பெயர்­க­ளை­யும் அழைத்து, பகி­ரங்­க­மான வாக்­கெ­டுப்­பாக நடை­பெ­ற­வுள்­ளது. ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் 106 உறுப்­பி­னர்­க­ளும், நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னத்­துக்கு எதி­ராக வாக்­க­ளிப்­பார்­கள் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.
சில­வே­ளை­க­ளில், ஐ.தே.க. அதி­ருப்தி உறுப்­பி­னர்­க­ளான அது­ர­லிய ரத்ன தேரர், விஜ­ய­தாச ராஜ­பக்ச, வசந்த சேன­நா­யக்க, பாலித ரங்கே பண்­டாரா உள்­ளிட்­டோர், ஆத­ர­வாக வாக்­க­ளிக்­க­லாம் என்று எதிர்வு கூறப்­ப­டு­கின்­றது.
சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்சி தலை­மை­யி­லான ஐக்­கிய மக்­கள் சுதந்­திர முன்­ன­ணி­யின் உறுப்­பி­னர்­கள் 95 பேரில், மகிந்த அணி உறுப்­பி­னர்­கள் 53 பேரும் தீர்­மா­னத்­துக்கு ஆத­ர­வாக வாக்­க­ளிப்­பார்­கள். சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யில், துமிந்த சில்வா உள்­ளிட்ட சிலரே தீர்­மா­னத்­துக்கு எதி­ராக வாக்­க­ளிப்­பார்­கள் என்­றும் ஏனை­யோர் மகிந்த அணி­யு­டன் இணைந்து தீர்­மா­னத்­துக்கு ஆத­ர­வாக வாக்­க­ளிப்­பார்­கள் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.
தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு பெரும்­பா­லும் வாக்­கெ­டுப்­பில் பங்­கேற்­காது விடும் முடி­வையே இன்று எடுக்­கக் கூடும் என்று எதிர்­வு ­கூ­றப்­ப­டு­கின்­றது. இந்த நிலையில் பிரதமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வின் பதவி நீடிக்குமா என்று இன்று இரவு 9.30 மணிக்­குத் தெரி­ய­வ­ரும்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |