Home » » பாடல்களை ஒலிபெருக்கியில் அலறவிடும் ஆலயங்களுக்கு எதிராக நடவடிக்கை- நீதிபதி இளஞ்செழியனுக்கு மக்கள் பாராட்டு

பாடல்களை ஒலிபெருக்கியில் அலறவிடும் ஆலயங்களுக்கு எதிராக நடவடிக்கை- நீதிபதி இளஞ்செழியனுக்கு மக்கள் பாராட்டு


கடவுளுக்கு காது நல்ல கூர்மை என்பதனால் சத்தமாக வழிபட வேண்டிய தேவை இல்லை’ என யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் உத்தரவிட்டுள்ளார்.நாயன்மார்கட்டு பகுதியில் அமைந்துள்ள மதவழிபாட்டு தளத்தில் அதிக சத்தத்துடன் வழிபாட்டில் ஈடுபடுவதாகவும், இதனால் தாம் பல அசௌகரியங்களுக்கு முகங்கொடுப்பதாகவும் நபர் ஒருவர் முறைப்பாடு செய்திருந்தார்.
அவரின் மனு மீதான விசாரணை நேற்று யாழ்.மேல் நீதிமன்றில் இடம்பெற்றுள்ளது,அதிகாலை வேளைகளில் மற்றும் ஞாயிறுக்கிழமைகளில் குறித்த மதவழிபாட்டு தளத்தில் அதிக சத்தம் எழுப்பி வழிபடுவதால் நோயாளியான தான் பாதிக்கப்படுவதாகவும்இ தனது சிறு பிள்ளைகளும் பாதிக்கப்படுவதாகவும்’ மனுவை தாக்கல் செய்தவர்கள் நீதிமன்றில் குறிப்பிட்டுள்ளார்.’மனிதர்களை விட கடவுள் நல்ல காது கூர்மை உடையவர். அவரை அமைதியான முறையில் வழிபடலாம். எங்கள் மதவழிப்பாட்டு உரிமை என்பது மற்றவர்களுக்கு இடையூறு விளைவிக்க கூடாது.
தற்போது ஆலயங்களில் ஒலிபெருக்கி பாவனைகள் கணிசமான அளவு குறைந்து உள்ளது. கடவுளை அமைதியாக மற்றவர்களுக்குஇ மற்ற மதத்தினருக்கு இடையூறு விளைவிக்காத வகையில் வணங்குங்கள்’ என நீதிபதி மா.இளஞ்செயழினை உத்தரவிட்டுள்ளார்.இந்த வழக்கு தீர்ப்பினால் மீண்டும் தென்னிலங்கை மக்கள் மத்தியில் நீதிபதி இளஞ்செழியன் பிரபலமடைந்துள்ளார்.அவரது தீர்ப்பிற்கு பேஸ்புக் உட்பட சமூக வலைத்தளத்தலத்தில் அதிக வரவேற்பு கிடைத்துள்ளதுடன் பலர் பாராட்டு தெரிவித்துள்ளனர். அத்துடன் நீதிபதியிடம் சில கோரிக்கைகளையும் விடுத்துள்ளனர்.(15)
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |