Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

புனானையில் தீவைத்து எரிக்கப்பட்ட சொகுசு பஸ்! - சாரதியும் நடத்துனரும் காயங்களுடன் தப்பினர்



முன் கூட்டிய ஆசனப்பதிவு செய்யப்பட்ட பயணிகளை ஏற்றி வருவதற்காக பொலன்னறுவையிலிருந்து கல்முனை நோக்கி பஸ் சென்று கொண்டிருந்த வேளையில் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் பஸ்ஸைப் பின் தொடர்ந்து வந்த நால்வர் பஸ்ஸைத் தீயிட்டுக் கொளுத்தி விட்டுத் தலைமறைவாகினர்.
பஸ் தீவைக்கப்பட்டதில் சாரதியும் அதன் உரிமையாளருமான மாதங்கொட்ட, மன்னம்பிட்டியைச் சேர்ந்த எச்.ஏ. சோமசிறி சாமர புஸ்பகுமார (வயது 30) மற்றும் அவரது உதவியாளரும் நடத்துனருமான வாழைச்சேனையைச் சேர்ந்த எம். முஹம்மத் (வயது 25) ஆகியோர் சிறிய காயமடைந்த நிலையில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக வாழைச்சேனைப் பொலிஸார் விரிவான விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

Post a Comment

0 Comments