Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

அமைச்சுக்களின் செயலாளர்கள் நியமனம் குறித்து பதில் முதலமைச்சருக்கும் ஆளுநருக்கும் இடையில் முரண்பாடு!

வடக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்களை நியமிப்பதில், பதில் முதலமைச்சர் க. சர்வேஸ்வரனுக்கும், வட மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரேவுக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் இன்று இடம்பெறவிருந்த செயலாளர்கள் மாற்றம் ஆளுநரால் ஒத்திவைக்கப்பட்டது.
வடக்கு மாகாண செயலாளர்கள் நியமனம் தொடர்பில் மாகாண ஆளுநரும் பதில் முதலமைச்சரும் இன்று காலை சந்தித்தனர். இதன்போது செயலாளர் நியமன விவரங்கள் ஆளுநரால் பதில் முதலமைச்சருக்குத் தெரிவிக்கப்பட்டது. இந்த நியமனத்தை ஏற்க மறுத்த பதில் முதலமைச்சர், தம்மால் பரிந்துரைக்கப்படுபவர்களை மட்டுமே செயலாளர்களாக நியமிக்க முடியும் என முரண்பட்டார். அதனையடுத்து ஆளுநரால் இன்று வழங்கப்படவிருந்த செயலாளர் மாற்றலை நிறுத்தி வைக்குமாறு பதில் முதலமைச்சர் கேட்டுக்கொண்டார். அதனால் மாற்றல் கடிதங்களை வழங்குவதை ஆளுநர் பிற்போட்டார் எனத் தெரியவருகிறது.

Post a Comment

0 Comments