Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் தவிசாளராக களுதாவளையின் ஞா.யோகநாதன் தெரிவு

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்கான முதலாவது சபை அமர்வு கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் எம்.வை.ஏ.சலீம் தலைமையில் இன்று காலை பிரதேச சபை ஒன்று கூடல் மண்டபத்தில் உள்ளூராட்சி அதிகாரிகள் பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை உறுப்பினர்கள் ஆகியோரின் பங்குபற்றலுடன் நடைபெற்றது.

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை உறுப்பினர்களை தேர்வு செய்வதற்காக 6 கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தி 123 வேட்பாளர்கள் போட்டியிட்டு இருந்த நிலையில் ஒரு தொங்கு உறுப்பினர் அடங்கலாக 21 உறுப்பினர்கள் கடந்த பெப்ரவரி மாதம் தேர்வு செய்யப்பட்டிருந்தனர்.

இலங்கை தமிழ் அரசுக் கட்சி 10 வட்டாரங்களில் வெற்றி பெற்றிருந்ததுடன் ஐக்கிய தேசியக் கட்சி ஒரு வட்டாரத்தினையும் தமிழர் விடுதலைக் கூட்டணி ஒரு வட்டாரத்தினை வட்டார ரீதியில் கைப்பற்றியிருந்ததுடன் விகிதாசார முறையில் இலங்கை தமிழரசுக் கட்சிக்கு ஆசனங்கள் கிடைக்கப் பெறாத நிலையில் ஐக்கிய தேசியக் கட்சி 03 ஆசனங்களையும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி 02 ஆசனங்களையும் தமிழர் விடுதலைக் கூட்டணி  ஒரு ஆசனத்தையும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி 02 ஆசனங்களையும் சுயேட்சைக் குழு -01 ஒரு ஆசனத்தையும் விகிதாசார முறையில் கைப்பற்றியுள்ள நிலையில் எந்தவொரு கட்சியும் தனித்து ஆட்சி அமைக்க முடியாத நிலை ஏற்பட்டிருந்த நிலையில் கூட்டு சேர்ந்து ஆட்சி அமைக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருந்தது. 

அதடிப்படையில் இன்றைய தினம் இடம்பெற்ற அமர்வில் தமிழ்த் தேசிக் கூட்டமைப்பின் சார்பில் களுதாவளை வட்டாரத்தில் இருந்து வெற்றி பெற்ற ஞா.யோகநாதன் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் தேற்றாத்தீவு வட்டாரத்தில் வெற்றி பெற்ற த.தவராணி ஆகியோர் தவிசாளர் பதவிக்கு திறந்த வாக்கெடுப்பு மூலம் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு ஞா.யோகநாதன் 11 வாக்குகளையும் த.தவராணி 6 வாக்குகளையும் பெற்றிருந்த நிலையில் 4 பேர் நடுநிலை வகிக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் களுதாவளையினை சேர்ந்த ஞா.யோகநாதன் சபையின் தவிசாளராக தேர்வு செய்யப்பட்டார்.

தொடர்ந்து நடைபெற்ற உபதவிசாளர் பதவிக்கு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்ட க.றஞ்சினி 11வாக்குகளை பெற்றுக் கொண்டதுடன் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் உபதவிசாளர் பதவிக்கு போட்டியிட்ட த.தவராணி 04 வாக்குகளை பெற்றதுடன் 06 பேர் நடுநிலை வகித்ததுடன் 11 வாக்குகளைப் பெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் கோட்டைக் கல்லாறினைச் சேர்ந்த க.றஞ்சினி உப தவிசாளராக தேர்வு செய்யட்டமை குறிப்பிடத்தக்கது.












Post a Comment

0 Comments