முச்சக்கர வண்டிகளில் பயணிகளுக்கு ரிசிற் விநியோகிக்கும் வகையிலான மீற்றர்களை பொருத்துவதற்காக எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் வரையில் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
முச்சக்கர உரிமையாளர் சங்கம் முன் வைத்த கோரிக்கைக்கு அமைவாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வீதிப்பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையின் தலைவர் டொக்டர் சிசிர கோதாகொட தெரிவித்துள்ளார்.
முச்சக்கர வண்டிகளுக்கு நேற்று முதல் குறித்த மீற்றர்கள் பொருத்தப்படுவது கட்டாயமென முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின்போது திரு கோத்தாகொட இதுதொடர்பாக மேலும் தெரிவிவக்கையில் தெரிவிக்கையில் பயணிகளுக்கு பற்றுச் சீட்டை வழங்குவதற்கு முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்கம் உடன்பட்டிருப்பதாக தெரிவித்தார்.
முச்சக்கர தொழிற்றுறை சங்கத்தின் தலைவர் லலித் தர்மரத்ன தெரிவிக்கையில் முச்சக்கர வண்டி தொழில் துiயை ஒழுங்குறுத்துவது அவசியமாகும் என்றார்.
முச்சக்கர வண்டி தொழில்துறை சங்கத்தின் பிரதிநிதி டபிள்யு. ஜி. சிரியாரத்ன, முச்சக்கர வண்டிக்கு மீற்றர் பொருத்துவது அவசியம் என்பதை தாம் ஏற்றுக் கொள்வதாக இதற்காக அரசாங்கம் ஏதேனும் நிவாரணம் வழங்க வேண்டும். என்று சுட்டிக்காட்டினார். -(3)

0 Comments