உள்ளூராட்சிமன்ற தேர்தலில் வெற்றிபெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளும் நிகழ்வுகள் இன்று வடகிழக்கில் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், மட்டக்களப்பு - அம்பாறை மாவட்டங்களில் இருந்து உள்ளூராட்சி மன்றங்களுக்கு தெரிவு செய்யப்பட்டவர்கள் சத்தியப்பிரமாணம் செய்யும் நிகழ்வு இன்று காலை மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் நடைபெற்றது.
இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளரும், கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சருமான கி.துரைராஜசிங்கம் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
இந்த நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ்.வியாழேந்திரன், ஞா.சிறிநேசன் மற்றும் கிழக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் தெரிவுசெய்யப்பட்ட 79 உறுப்பினர்களும், அம்பாறை மாவட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட 27 உறுப்பினர்களுமாக 106 உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.

0 Comments