Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

ஜெனிவா பக்க அமர்வில் குழப்பம் விளைவித்த இலங்கையின் முன்னாள் இராணுவ அதிகாரிகள் !

ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் நேற்று இடம்பெற்ற பக்க அமர்வு ஒன்றில் தமிழர் தரப்பினருக்கும், இலங்கை இராணுவத்தின் முன்னாள் அதிகாரிகளுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. சுயநிர்ணய உரிமை தொடர்பாக இடம்பெற்ற பக்க அறைக் கூட்டத்திலேயே குறித்த முறுகல் நிலை தோன்றியுள்ளது.
இதில், அருட் தந்தை ஜெயபாலன், பேராசிரியர் போல் நியூமன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறீதரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் சபாநாயகர் நாகலிங்கம் பாலச்சந்திரன் மற்றும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பா.உ கொலிங்ஸ் ஆகியோரும் இதில் பங்கேற்றிருந்தனர். மேலும், சென்னை உயர்நீதிமன்றின் முன்னாள் உயர் நீதியரசரும் இதில் பங்கேற்றுள்ளார்.
இந்நிலையிலேயே, முன்னாள் இராணுவ தரப்பின் அணியினருக்கும், இங்கு வாதங்களை முன்வைத்த தமிழர் தரப்பினருக்குமிடையே முறுகல் நிலை தோன்றியது இதையடுத்து, அமர்வு இடைநிறுத்தப்பட்டு தமிழர் தரப்பினர் அறையை விட்டு வெளியேறினர்.

Post a Comment

0 Comments