பத்தரமுல்லை நெலும் மாவத்தையில் அமைந்துள்ள ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் இது வரை 51 பேர் கையொப்பமிட்டுள்ளனர். பிரேரணைக்கு அரசாங்கத்திலுள்ள ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களும் அதரவளிப்பார்கள். இதனால் அவர்களில் சிலரின் கையொப்பங்களையாவது பொற்றுக்கொள்ள வேண்டும். அதன்படி நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன. அதேபோன்று ஐக்கிய தேசிய கட்சியிலும் அவ்வாறான நிலைப்பாட்டில் இருப்பவர்கள் உள்ளனர். அவர்களில் சிலரின் கையொப்பங்களையாவது பெற்றுக்கொள்ள வேண்டும். இது தொடர்பாக கடந்த 2 நாட்களாக கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளன. என அவர் தெரிவித்துள்ளார். -(3)
0 Comments