மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குருமண்வெளிக் கிராமத்தில் ஒரு பிள்ளையின் தாய் ஒருவர் தூக்கில் தெங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குருமண்வெளி பிள்ளையார் கோவில் வீதியைச் சேர்ந்த முத்துலிங்கம் கோசலை (42வயது) என்பவரே தனது வீட்டின் படுக்கை அறையினுள் தூக்கில் தொங்கியவாறு உயிரிழந்துள்ளார் இச்சம்பவம் இன்று திங்கட்கிழமை பி.ப 1.30 மணியளவில் நடைபெற்றுள்ளது.
இவர் கடந்த சில தினங்களாக நுண்கடன் பிரச்சினையினால் மன அழுத்தத்திற்கு முகம் கொடுத்திருந்ததாக கிராமவாசிகள் தெரிவிக்கின்றனர். இவ் விடயம் தொடர்பில் களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.



0 Comments