இலங்கையில் காசநோய் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த வருடம் 8 ஆயிரத்து 511 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதில் 8 ஆயிரத்து 112 பேர் புதிதாக இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் காசநோயால் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து பரவ கூடிய சந்தர்ப்பம் காணப்படுவதால் அவதானமாக இருக்கும்படி மருத்துவர்கள் கூறியுள்ளனர். மேலும் காசநோய் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவமனையை நாடும்படியும் தெரிவித்துள்ளனர்.


0 Comments