Home » » அமைச்சரவை தீர்மானங்கள்!

அமைச்சரவை தீர்மானங்கள்!


2018.03.27 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவை சந்திப்பின் போது எடுக்கப்பட்ட முடிவுகள்

(இது அமைச்சரவை தீர்மானங்கள் தொடர்பில் நேரடியாக பெறப்பட்ட தமிழ்மொழிபெயர்ப்பாகும்)

01. இலங்கை கணக்கீட்டுத் தொழில்நுட்பவியலாளர்களின் சங்கம் (AAT) (விடய இல. 06)

இலங்கை கணக்கீட்டுத் தொழில்நுட்பவியலாளர்களின் சங்கத்தின் நடவடிக்கைகளை மேலும் விருத்தி செய்து சிறு மற்றும் நடுத்தர விவசாய துறைகளுக்கு அவசியமான நிபுணத்துவ கணக்கீட்டுத் தொழில்நுட்பவியலாளர்களை உருவாக்குவதற்காக பாராளுமன்ற சட்டமொன்றின் மூலம் ஸ்தாபிப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. அதற்கு அவசியமான சட்ட மூலத்தினை தயாரிப்பதற்காக சட்ட வரைஞர் திணைக்களத்துக்கு ஆலோசனை வழங்குவது தொடர்பில் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சர் எனும் ரீதியில் கௌரவ பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

02. களுகங்கை அபிவிருத்தி வேலைத்திட்டத்துக்காக மேலதிக நிதியினை திரட்டிக் கொள்ளல் (விடய இல. 09)

களுகங்கை அபிவிருத்தி வேலைத்திட்டத்தினை முன்னெடுத்துச் செல்லும் போது இனங்காணப்பட்ட புதிய வேலைத்திட்டங்களின் விளைவினால், அதன் ஒப்பந்த தொகையினை அதிகரிக்க வேண்டி ஏற்பட்டது. அதனால் மேலதிகமாக தேவைப்படுகின்ற நிதியில் 16 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மேலதிக நிதியினை பெற்றுத் தருவதற்கு அபிவிருத்திக்கான சவுதி நிதியம் இணக்கம் தெரிவித்துள்ளது. அதனடிப்படையில், குறித்த கடன் தொகையினை பெற்றுக் கொள்வதற்கான கலந்துரையாடல்களை மேற்கொள்வதற்கும், உரிய கடன் ஒப்பந்தங்களில் கைச்சாத்திடுவதற்குமாக தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சர் எனும் ரீதியில் கௌரவ பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

03. தல்பிடிகல நீர்தேக்க வேலைத்திட்டத்தினை செயற்படுத்துவதற்காக கடன் வசதிகளை பெற்றுக் கொள்ளல் (விடய இல. 12)

தல்பிடிகல நீர்தேக்க வேலைத்திட்டத்தினை செயற்படுத்துவதற்காக மதிப்பிடப்பட்டுள்ள தொகையில் 15 வீதத்தினை உள்ளடக்கும் வகையிலான 26.1 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு மக்கள் வங்கி இணக்கம் தெரிவித்துள்ளது. அதற்கான கடன் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவது தொடர்பில் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சர் எனும் ரீதியில் கௌரவ பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

04. மரதானையில் அமைந்துள்ள வரலாற்று முக்கியத்துவமிக்க கொழும்பு வலயத்துக்குரிய புகையிரத நிலையத்தில் ‘இலங்கை தேசிய புகையிரத நூதனசாலையினை’ ஸ்தாபித்தல் (விடய இல. 15)

பல்வேறு தரப்பினருக்கும் நன்மைப்பயக்கும் வகையில் மரதானையில் அமைந்துள்ள வரலாற்று முக்கியத்துவமிக்க கொழும்பு வலயத்துக்குரிய புகையிரத நிலையத்தில் ‘இலங்கை தேசிய புகையிரத நூதனசாலையினை’ ஸ்தாபித்தல் தொடர்பில் போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் கௌரவ நிமல் சிறிபால டி சில்வா அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

05. இலங்கையில் மரத்தொழில் பெறுமதியினை அதிகரித்தல் (விடய இல. 22)

இலங்கையில் முன்னெடுக்கப்படுகின்ற பல்வேறு தொழில் துறை அபிவிருத்திகளில் மரத்தொழில் துறை அபிவிருத்தியானது மந்த கதியினையே காட்டி நிற்கின்றது. இதனால் குறித்த துறையில் நிலைபேறான அபிவிருத்தியினை மேற்கொள்வதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. அதற்கினங்க குறித்த துறையில் பல்வேறு உதவிகளை வழங்கி வருவின்ற International Tropical Timber Organization – ITTO நிறுவனத்தின் உறுப்புரிமையினை பெற்றுக் கொள்வதற்கும், மரத்தொழிலில் பிரசித்தி பெற்று விளங்குகின்ற மொரடுவை பகுதியில் மரத்தொழில் வடிவமைப்பு புத்தாக்க நிலையமொன்றை அமைப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

குறித்த நிலையத்தின் ஊடாக அரச மரக்கூட்டுத்தாபனம் மற்றும் மொரடுவை பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் குழுக்களின் ஒத்துழைப்புடன் முன்னணி வகிக்கின்ற மர வகைகளை விருத்தி செய்து விசேடமான மர வடிவமைப்பு வலயமாக மொரடுவை பிரதேசத்தினை அபிவிருத்தி செய்வதற்கு முடியும் என இனங்காணப்பட்டுள்ளது. அதனடிப்படையில், மேற் கூறிய திட்டத்தினை செயற்படுத்துவதற்காக விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி அமைச்சின் மூலம் உரிய நிறுவனம் மற்றும் பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடுவது தொடர்பில் விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி அமைச்சர் கௌரவ சுசில் பிரேமஜயந்த அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

06. பயாகலை சுகாதார மருத்துவ அலுவலகர் காரியாலயத்தினை ஸ்தாபிப்பதற்காக காணியொன்றை கையகப்படுத்துதல் (விடய இல. 25)

பயாகலை, வடுகொடை பிரதேசத்தில் வசிக்கின்ற மக்களின் நலன் கருதி, பயாகலை சுகாதார மருத்துவ அலுவலகர் காரியாலயத்தினை ஸ்தாபிப்பதற்காக மூடிய நிலையில் காணப்படுகின்ற வடுகொடை ஆரம்ப பிரிவு பாடசாலை பூமியினை தமது அமைச்சுக்கு ஒதுக்கிக் கொள்வது தொடர்பில் சுகாதாரம், போசனை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் கௌரவ டாக்டர் ராஜித சேனாரத்ன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

07. மூளை செயலிழந்த நபர்களின் உடலுறுப்புக்களை பிறிதொருவருக்கு பொருத்தும் செயன்முறையினை இலங்கையில் அறிமுகம் செய்தல் (விடய இல. 26)

மூளை செயலிழந்த நபர்களின் உடலுறுப்புக்களை பிறிதொருவருக்கு பொருத்தும் தேசிய நிகழ்ச்சித்திட்டமொன்றை இலங்கையினுள்ளும் செயற்படுத்துவதற்கான செயன்முறையொன்றை தயாரிப்பது தொடர்பில் சுகாதாரம், போசனை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் கௌரவ டாக்டர் ராஜித சேனாரத்ன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |