Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

இலங்கையில் மண்ணெண்ணெயின் பாவனை திடீர் அதிகரிப்பு


இலங்கையில் மண்ணெண்ணெயின் பாவனை திடீரென்று அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி ஒரு லட்சத்து 98 ஆயிரத்து 90 கிலோ லீற்றர் மண்ணெண்ணெய் கடந்த வருடமளவில் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு லீற்றர் ஒன்று 44 ரூபாவிற்கு நிவாரண அடிப்படையில் தற்போது வழங்கப்படுவதுடன் லீற்றர் ஒன்றினால் கனிய எண்ணெய் கூட்டுத்தாபனத்திற்கு 48 ரூபாய் நட்டம் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய கடந்த வருடம் மாத்திரம் மண்ணெண்ணெய் விற்பனையால் அரசாங்கத்துக்கு 5.4 பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது.
இதேவேளை, நிவாரண நோக்கத்தைக் கருத்திற்கொண்டு மானிய அடிப்படையில் வழங்கப்படும் மண்ணெண்ணெயானது, பேரூந்து, மற்றும் பாரவூர்தி ஆகியவற்றிற்கு விற்பனை செய்யப்படுவதாக சில நாட்களின்முன்னர் செய்திகள் வெளியாகியிருந்தன. குறிப்பாக வடக்கு மாகாணத்தை மையப்படுத்தியே இந்த வர்த்தகம் இடம்பெறுவதாக கூறப்பட்டது.
எவ்வாறாயினும், எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மண்ணெண்னை கலந்து விற்பனை செய்யப்படுகின்றமை உறுதிப்படுத்தப்பட்டால் அதன் அனுமதிபத்திரம் ரத்து செய்யப்படும் என கனிய எண்ணெய் வள அபிவிருத்தி அமைச்சர் அர்ஜூன ரணதுங்க எச்சரித்துள்ளார்.(15)

Post a Comment

0 Comments