Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

கருணை மனு கையெழுத்து போராட்டத்துக்கு அழைப்பு


தாயை இழந்து தந்தையை பிரிந்து வாழும் கனிதரன்(வயது-13) மற்றும் சங்கீதா(வயது-11) ஆகிய இரு சிறுவர்களின் நிகழ் மற்றும் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தந்தையார் ஆகிய ஆயுள் தண்டனை கைதி திரு.ச.ஆனந்தசுதாகர் அவர்களின் பொது மன்னிப்பு கோரிய கருணை மனு கையெழுத்து போராட்டம் 21-03-2018 அன்றைய தினம் “தமிழ் இளையஞர் சமூகம்” விசுவமடு பகுதியில் ஆரம்பித்தது.
தொடர்ந்து 21-03-2018 தொடக்கம் 25-03-2018 வரை கருணை மனு கையெழுத்து,நாட்டின் அனைத்து பகுதிகளிலும் சேகரித்து எதிர் வரும் 26-03-2018 திங்கள் கிழமை கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் கிளிநொச்சி மாவட்ட அரச அதிபரிடம் கையளிக்க உள்ளோம்.ஆகவே 23-03-2018 வெள்ளிக் கிழமை கருணை மனு கையெழுத்து போராட்டம் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய வளாகத்தில் காணமல ஆக்கப்பட்டவர்களின் போராட்ட கொட்டகை முன்னிலையில் நடைபெற உள்ளது. ஆகவே அனைவரும் வருகை தந்து பொது மன்னிப்பு கோரிய கருணை மனுவிற்கு ஆதரவு வழங்குங்கள்.
தொடர்ந்து வடக்கில் 23-03-2018 வெள்ளிக் கிழமை வடக்கில் வவுனியா, மன்னார், முல்லைத்தீவு மற்று யாழ்ப்பாணத்திலும் கருணை மனுவிற்கு கையெழுத்து சேகரிக்க முன்வாருங்கள்.கருணை மனுவின் பிரதிகளை பெற்று உங்கள் பிரதேசத்தில் கையொப்பம் சேகரிக்க உங்கள் பிரதேசத்திற்கு நாம் அனுப்ப தயார்.23-03-2018 கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்பாக கையெழுத்து போராட்டம் நடைபெற உள்ளது. அனைவரும் வந்து மனிதநேய பணியில் இணையுங்கள் என தமிழ் இளையஞர் சமூகம் அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது .(15)

Post a Comment

0 Comments