Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

இலங்கை வரைபடத்தில் மாற்றம்

இலங்கையில் பூகோல ரீதியிலான வரைபடத்தை புதிதாக தயாரிப்பதற்கு நில அளவை திணைக்களம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
புதிய இலங்கை வரைபடம் 1:50 000 92 ஸ்கோப்பிங் வரைபடமாக அமைந்துள்ளது. இதில் 65 ஸகோப்பிங் பணிகள் நிறைவுசெய்யப்பட்டுள்ளதுடன் எஞ்சிய ஸ்கோப்பிங் வரைபடங்கள் எதிர்வரும் சில மாதங்களில் பூரணப்படுத்தப்படவுள்ளதாக அரச நில அளவையாளர் பிஎம்பி உதய காந்த எமது செய்திப்பிரிவிற்கு தெரிவித்தார்.
இலங்கையின் வரைபடம் மீண்டும் வரையப்படுவது 18 வருடங்களிற்கு பின்னரே. இக்காலப்பகுதியில் இலங்கை நிலப்பரப்பில் மாற்றங்கள் பல இடம்பெற்றுள்ளன. புதிய வரைபடத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுவரும் கொழும்பு துறைமுக நகரமும் உள்வாங்கப்படவுள்ளது.
இலங்கையின் தெற்கு மற்றும் கிழக்கு கரையோர பகுதிய நீண்டிருப்பதை காணக்கூடியதாக இருப்பதுடன் சிலாபக் கரையோரப்பகுதி குறைவடைந்திருப்பதாகவும் அவர் கூறினார்.
இந்த விடயங்கள் புதிய வரைபடத்தின் மூலம் கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இலங்கையின் புதிய வரைபடம் செய்மதி தொழிற்நுட்பத்தை பயன்படுத்தி வரையப்படுவதுடன் அதன் பணிகள் பூர்த்தி செய்யப்பட்ட பின்னர் புதிய வரைபடத்தை நிலஅளவையாளர் திணைக்களத்தின் இணையத்தளத்தில் பார்வையிடலாம் என்றும் நிலஅளவையாளர் குறிப்பிட்டார். -

Post a Comment

0 Comments