யாழ்ப்பாணம் மானிப்பாய் பிரதேசத்தில் இரண்டு இடங்களில் வாள் வெட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்த சம்பவங்களில் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளொன்றில் வந்த குழுவொன்று மானிப்பாய் அம்மன் கோயில் வீதிக்கு அருகில் 49 வயது நபரொருவர் மீதும் அதேநேரத்தில் மற்றுமொரு இடத்தில் 24 வயது இளைஞன் ஒருவன் மீதும் வாள் வெட்டை மேற்கொண்டுள்ளனர்.
இதில் காயமடைந்த இருவரும் யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


0 Comments