(எம்.ஐ.எம்.அஸ்ஹர்)
களுவாஞ்சிக்குடி ,பட்டிருப்பு தேசிய பாடசாலை மாணவத் தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு இன்று ( 24) பாடசாலை திறந்தவெளியரங்கில் பாடசாலை அதிபர் கே.தம்பிராஜா
தலைமையில் இடம்பெற்றது.
பாடசாலை பிரதி அதிபர்களான என்.நாகேந்திரன் ,எம்.சுவேந்திரராஜா ,ரீ.ஜனேந்திரராஜா ஒழுக்காற்று குழுஆசிரியர்கள் பாடசாலை ஆசிரிய ஆசிரியைகள் ,மாணவர்கள் மற்றும் கல்விசாரா உத்தியோஸ்தர்களும் ஊழியர்களும் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
சிரேஸ்ட மாணவத் தலைவராக பீ. மயுரவேலும் ,சிரேஸ்ட மாணவத் தலைவியாக என். ஜதுசியாவும், உதவி மாணவத் தலைவராக ஆர்.விதுர்சனும், உதவி மாணவத் தலைவியாக வீ. ரம்யாவும் நியமனம் செய்யப்பட்டதுடன் இவர்களுக்கான சின்னங்களை அதிபர் மற்றும் பிரதி அதிபர்களும் ஏனைய மாணவத் தலைவர்களுக்கான சின்னங்களை பாடசாலை ஆசிரியாகளும் சூட்டினார்கள்.







0 Comments