பங்களாதேஷில் நடைபெற்ற முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் இலங்கை அணி சம்பியனாகியுள்ளது.
பங்களாதேஷை 79 ஓட்டங்கங்களால் தோற்கடித்து இலங்கை அணி கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது.
இலங்கை , சிம்பாபே மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதிய முத்தரப்பு கிரிக்கெட்டு தொடரில் இன்றைய தினம் இறுதிப் போட்டி நடைபெற்றது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்களின் சகல விக்கெட்டுகளையும் இழந்து 221 ஓட்டங்களை பெற்றிருந்தது.
இதனை தொடர்ந்து பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 41.1 ஓவர்களில்தோ சகல விக்கெட்டுகளையும் இழந்து 142 ஓட்டங்களை பெற்றுதோல்வியடைந்தது.


0 Comments