ஆப்கான் தலைநகர் காபுலில் இடம்பெற்ற குண்டுவெடிப்புசம்பவத்தில் 40 ற்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 140 பேர் காயமடைந்துள்ளனர்.
அம்புலன்ஸ் ஒன்றில் மறைத்துவைக்கப்பட்டிருந்த குண்டுவெடித்ததிலேயே பாரிய உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.
வெளிநாட்டு தூதரகங்கள் மற்றும் அரசாங்க அலுவலகங்கள் அமைந்துள்ள பகுதியிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
40பேர் கொல்லப்பட்டு 140ற்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளதை ஆப்கானின் சுகாதார அமைச்சின் பேச்சாளர் உறுதிசெய்துள்ளார்.
பொலிஸாரின் சோதனைச்சாவடியொன்றிற்கு அருகில் வந்த அம்புலன்ஸ் வெடித்துச்சிதறியதை பார்த்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
உள்துறை அமைச்சை இலக்குவைத்தே இந்த தாக்குதல் இடம்பெற்றிருக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை தலிபான் இந்த குண்டுவெடிப்பிற்கு உரிமை கோரியுள்ளது


0 Comments