Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

பிணை முறி அறிக்கைகள் குறித்த விவாதம் பெப்ரவரி மாதம் 8 ஆம் திகதி

பிணை முறி மற்றும் பாரிய ஊழல் மோசடிகள் குறித்த அறிக்கைகள் மீது விவாதம் நடத்த பெப்ரவரி மாதம் 8 ஆம் திகதி நாடாளுமன்றத்தைக் கூட்டவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
தெனியாயவில் இன்று மதியம் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இரண்டு ஆணைக்குழு அறிக்கைகள் மீது விவாதம் நடத்துவதா? இல்லையா? என்பது தொடர்பில் கருத்துகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், நேற்றிரவு சபாநாயகரை தாம் சந்தித்து, பெப்ரவரி மாதம் 8ஆம் திகதி நாடாளுமன்றத்தைக் கூட்டடுமாறு கூறியுதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான கடிதத்தை எதிர்வரும் திங்கட்கிழமை அனுப்பிவைக்க உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
அதன் பின்னர், என்ன செய்ய வேண்டும் என்பதை கட்சித் தலைவர்கள் தீர்மானிப்பர்.
இரண்டு அறிக்கைகள் குறித்து விவாதம் நடத்தவே நாடாளுமன்றத்தைக் கூட்ட உள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments