Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

யாழ்ப்பாணத்தில் உள்ள ஜனாதிபதி மாளிகையை சுற்றுலா விடுதியாக மாற்ற நடவடிக்கை!

யாழ்ப்பாணத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி மாளிகையை சுற்றுலா விடுதியாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
  
கம்பஹாவில் நேற்றுப் பிற்பகல் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
350 கோடி ரூபா செலவில் யாழ்ப்பாணத்தில் நிர்மாணிக்கப்பட்ட ஜனாதிபதி மாளிகை தற்போது வெறுமனே மூடப்பட்டிருக்கிறது.
அதன் நன்மைகளை நாட்டுக்கு பெற்றுக்கொடுக்கும் நோக்கில் அந்த மாளிகையை உயர்தரம் வாய்ந்த சுற்றுலா ஹோட்டலாக மாற்றுவதற்கு தற்போது சர்வதேச ரீதியாக விலைமனு கோரப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments