Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

இரண்டாவது நாளாக இன்றும் வடபிராந்திய இ.போ.ச ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில்

இலங்கைப் போக்குவரத்து சபையின் வட பிராந்திய ஊழியர்கள் இரண்டாவது நாளாகவும் இன்று பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள புதிய பஸ் நிலையத்தை பாவனைக்கு உட்படுத்துவதற்காக வவுனியா பழைய பஸ் நிலையம் மூடப்பட்டுள்ளது.
பழைய பஸ் நிலையத்திற்குள் பஸ்கள் செல்ல முடியாத வகையில், தடை ஏற்படுத்தப்படடுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று முதல் இலங்கைப் போக்குவரத்து சபையின் வட பிராந்திய ஊழியர்கள் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த பணிபகிஷ்கரிப்பு இரண்டாவது நாளாக இன்றும் தொடர்கின்றது.போக்குவரத்து சபை ஊழியர்களின் பணிபகிஸ்கரிப்பு காரணமாக வடமாணத்தின் அனேகமான பகுதிகளில் மக்கள் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்
முதலாம் தவணை பாடசாலை கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பமாகியுள்ள நிலையில், மாணவர்களின் நலன் கருதி மாணவர்களுக்கு இலவச போக்குவரத்து சேவையை வழங்குவதற்கு தனியார் பஸ் ஊழியர்கள் முன்வந்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.(

Post a Comment

0 Comments