|
இலங்கையில் நாள் ஓன்றுக்கு இரண்டு கிலோ கிராம் எடையுடைய ஹெரோயின் போதைப் பொருள் நுகரப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. நாட்டில் சுமார் 45000 பேர் ஹெரோயின் போதைப் பொருள் பயன்படுத்துகின்றார்கள் என ஆபத்தான ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் தலைவர் பேராசிரியர் ரவீந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
|
ஹெரோயின் பயன்பாட்டாளர்களின் தேவைக்காக வருடாந்தம் 1478 கிலோ கிராம் எடையுடைய ஹெரோயின் போதைப் பொருள் தேவைப்படுகின்றது என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.இந்தியா மற்றும் பாகிஸ்தானிலிருந்து அதிகளவான ஹெரோயின் போதைப் பொருள் இலங்கைக்கு கடத்தப்படுகின்றது. இலங்கையில் சட்டவிரோதமான முறையில் வரட்சியான பகுதிகளில் 500 ஏக்கரில் கஞ்சா போதைப் பொருள் பயிரிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
2020ம் ஆண்டளவில் நாட்டில் போதைப் பொருள் பயன்பாட்டை முற்றாக அழிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
|


0 Comments