லிபியாவின் கடற்பரப்பில் அகதிகளின் படகுகள் கவிழ்ந்ததில் பலர்கொல்லப்பட்டுள்ள அதேவேளை நூற்றுக்கிற்கும் மேற்பட்டவர்கள் காணாமல்போயுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன
உயிருடன் மீட்கப்பட்டவர்கள் தங்களுடன் பயணம் செய்த 50 பேர் காணாமல்போயுள்ளனர் என தெரிவித்துள்ள அதேவேளை கடலோர காவல்படையினர் 100 பேர் வரை காணாமல்போயுள்ளனர் என தெரிவித்துள்ளனர்.
செவ்வாய்கிழமை மூன்று படகுகளில் இருந்து 300 பேரை மீட்டுள்ளதாக தெரிவித்துள்ள லிபியாவின் கடலோர காவல்படையினர் ரப்பர் படகு மிகமோசமான நிலையில் காணப்பட்டது சேதமடைந்த நிலையில் காணப்பட்டஅ படகைபிடித்துக்கொண்டு உயிரை காப்பாற்றுவதற்காக போராடிக்கொண்டிருந்த 16 பேரையும் மீட்டுள்ளோம் என குறிப்பிட்;டுள்ளனர்.
ஏனைய அனைவரும் காணாமல்போயுள்ளனர் உடல்கள் எதனையும் நாங்கள் காணவில்லை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.


0 Comments