Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

கதிர்காமத்தில் தொடர்ந்தும் பதற்றம் : மீண்டும் மீண்டும் கண்ணீர் புகை வீச்சு! 63 பேர் கைது

கதிர்காமத்தில் மீண்டும் பதற்றமான நிலமை ஏற்பட்டுள்ளதுடன் அங்கு அமைதியின்மையை ஏற்படுத்தும் வகையில் நடந்துக்கொண்ட குற்றச்சாட்டில் 63 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நேற்று இரவு பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் உயிரிழந்த சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இரவு பிரதேசவாசிகளினால் கதிர்காமம் பொலிஸ் நிலையம் மீது கடும் தாக்குதல் நடத்தப்பட்டிருந்த நிலையில் பின்னர் கண்ணீர் புகை தாக்குதல் மேற்கொண்டு நிலைமை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டிருந்தது.
எவ்வாறாயினும் மீண்டும் இன்று காலை முதல் அந்த பகுதியில் பாரிய ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. இதன்போது மக்கள் அமைதியின்மையை ஏற்படுத்தும் வகையில் நடந்துக்கொண்டதால் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர மீண்டும் கண்ணீர் புகை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதன்போது 15 பெண்கள் அடங்கலாக 63 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். -(3)19247974_2044379628907306_6400319365656608892_n26733499_2044379288907340_8202008905665894882_n26907622_2044379042240698_9059811272300631239_n26993896_2044379138907355_8363516077623940413_n

Post a Comment

0 Comments