Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

கிழக்கில் சரியான தலைமைத்துவம் உருவாக்கப்படவேண்டும் -முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்

கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து தமிழர்களும் ஒன்றிணைந்து சரியான தலைமைத்துவத்தினை உருவாக்கினால் மட்டுமே தமிழர்களின் பிரதிநிதித்துவம் நூற்றுக்கு நூறு பாதுகாக்க முடியுமென முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் தமிழர் விடுதலைக்கூட்டணியின் கிழக்கு மாகாண இணைப்பாளருமான இரா.துரைரெட்னம் தெரிவித்தார்.மட்டக்களப்பு வாவிக்கரையில் உள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்தில் தனி அரசியல் தலைமை உருவாக்கும்போதே கிழக்கு தமிழர்களின் இருப்பு பாதுகாக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
தமிழரசுக்கட்சிக்கும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணிக்கும் இடையில் ஏற்பட்ட கொள்கை ரீதியான முரண்பாடுகளும் தமிழரசுக்கட்சியின் ஒரு சிலரின் செயற்பாடுகள் காரணமாகவும் மேலும் பல விடயங்களை உள்ளடக்கியும் பல கட்சிகள் இணைந்து ஒரு கூட்டை உருவாக்கியுள்ளோம்.
ஐந்து கட்சிகள் ஒன்றிணைந்து வடகிழக்கில் எதிர்வரும் உள்ளுராட்சி தேர்தலில் போட்டியிடுவதாக தீர்மானித்துள்ளோம்.இதனடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூர்ப்பற்று,ஏறாவூர் நகரசபை,மண்முனைப்பற்று பிரதேசசபை,கோறளைப்பற்று பிரதேசசபை ஆகிய நான்கு பிரதேசசபைகளுக்கு கட்டுப்பணத்தினை செலுத்தியுள்ளோம்.
இதன் தொடர்ச்சியாக மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மக்களை பொறுத்தவரையில் தமிழ் கட்சிகளை பொறுத்தவரையில் சில உள்ளுராட்சிமன்ற பகுதிகளில் தமிழ் பிரதிநிதித்துவத்தினை பாதுகாக்கவேண்டிய பொறுப்பு தமிழ் கட்சிகளுக்கு உள்ளது.
அதனடிப்படையில் எமது கட்சியினை பொறுத்தவரையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மண்முனைப்பற்று பிரதேசசபையில் இரண்டு பகுதிகளிலும் ஏறாவூர் நகரசபைகளில் இரண்டு இடங்களிலும் வாழைச்சேனையில் மூன்று இடங்களிலும் செங்கலடியில் ஒரு இடமும் பட்டிப்பளை பிரதேசசபையில் ஒரு இடமும் கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடியில் நான்கு இடங்களிலும் தமிழர்களின் பிரதிநிதித்துவத்தினை பாதுகாக்கும் வகையில் அனைத்து கட்சிகளுடனும் பேசி உடன்படிக்கையொன்றுக்கு வருமாறு அனைத்து தமிழ் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கின்றேன்.
எதிர்வரும் மாகாணசபை தேர்தல்,பாராளுமன்ற தேர்தல்களிலும் தமிழ் பிரதிநிதித்துவங்களை பாதுகாக்கும் வகையில் ஏனைய கட்சிகளுடன் பேசுவதற்கும் நாங்கள் தயாராகயிருக்கின்றோம்.
கிழக்கு மாகாணத்தில் தமிழர் பிரதிநிதித்துவங்களை பாதுகாப்பதற்காக இணக்கப்பாடுகளையும் விட்டுக்கொடுப்புகளையும் செய்வதற்கு தயாராகயிருக்கின்றோம்.
நாங்கள் உதயசூரியன் சின்னத்தில் இந்த கட்சிகள் இணைந்து போட்டியிடவுள்ளோம்.உள:ளுராட்சிமன்ற தேர்தலில் 11பிரதேச சபைகளிலும் போட்டியிடுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
இது கொள்கை ரீதியான ஒரு போராட்டம்.தமிழர் பிரதிநிதித்துவத்தினை பாதுகாப்பதற்காக நாங்கள் உதயசூரியன் சின்னத்தில் களமிறங்கியுள்ளோம்.அதேபோன்று கிழக்கு மாகாணசபையிலும் தமிழர் ஒருவரை முதலமைச்சராக கொண்டுவரவேண்டும் என்பதான நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.
அம்பாறை மாவட்டத்தில் தமிழர்களின் பகுதி எந்த இனத்தின் கீழும் செல்லாதவகையிலான செயல்வடிவங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏனைய இனங்களின் செயற்பாடுகளில் இருந்து தமிழர்களின் பகுதிகளை பாதுகாக்கும் வகையிலான நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளோம்.
உள்ளுராட்சிமன்றங்களில் முதலாவது அபிவிருத்தி என்ற விடயத்தில் நாங்கள் பின்னிற்கப்போவதில்லை.அதேபோன்று கொள்கைரீதியான செயல்வடிவங்களிலும் நாங்கள் பின்னிற்கப்போவதில்லை.எதிர்காலத்தில் தமிழர் பிரதிநிதித்துவங்களை பாதுகாக்கும் வகையிலான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு நாங்கள் தயாராகவிருக்கின்றோம்.
தமிழ் தேசிய கூட்டமைப்பில் உள்ள தமிழரசு;ககட்சி பாராளுமன்ற தேர்தலில் முன்வைக்கப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தை அமுல்படுத்தவில்லை, தமிழரசுக்கட்சியின் தன்னிச்சையான செயற்பாடுகள்,தமிழ் தேசிய கூட்டமைப்புகள் சமாந்தரம் பேணப்படவில்லை.இதுபோன்ற காரணங்களினால்தான் எங்களுக்கும் தமிழரசுக்கட்சியில் உள்ள சிலருக்கும் முரண்பாடுகள் இருக்கின்றது.
இந்த பிரச்சினைகளை பல வருடமான தீர்ப்பதற்கு முயற்சிகளை மேற்கொண்டபோதிலும் எந்த முயற்சியும் வெற்றியளிக்கவில்லை.தமிழர்கள் பல ஆயிரம் உயிர்களையும் சொத்துகளையும் இழந்து மேற்கொண்ட ஆயுதப்போராட்டங்களை பலவீனப்படுத்தும் வகையிலான நடவடிக்கைகளை நாங்கள் ஏற்றுக்கொள்ளமாட்டோம்.
ஆயுதப்போராட்டத்திற்கு பின்னர் நாங்கள் ஜனநாயக ரீதியான போராட்டங்களை மேற்கொள்ளவேண்டும்.அவ்வாறு இல்லாமல் அந்த போராட்டங்களை நலீணப்படுத்தும் வகையில் தமிழரசுக்கட்சியின் சிலர் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளை நாங்கள் எதிர்க்கின்றோம்.
கிழக்கினைப்பொறுத்தவரையில் இந்த கூட்டு தமிழர்களை பலப்படுத்துவதற்கான கூட்டே தவிpர யாரையும் பலவீனப்படுத்துவதற்கான கூட்டு அல்ல.கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து தமிழர்களும் ஒன்றிணைந்து சரியான தலைமைத்துவத்தினை உருவாக்கினால் மட்டுமே தமிழர்களின் பிரதிநிதித்துவம் நூற்றுக்கு நூறு பாதுகாக்கப்படும்.கொள்கையினை விலைபேசுவதற்கோ,தனிப்பட்டவர்களின் சுயநலத்திற்கோ நாங்கள் ஒருபோதும் இடமளிக்கமாட்டோம்.
DSC03858

Post a Comment

0 Comments