தேர்தல் முடிவடையும் வரை வேட்பாளார்களினால் பொது மக்களுக்கு விநியோகிக்கப்படும் பொருட்கள் , அரசியல்வாதிகளினால் திறந்து வைக்கப்படும் கட்டிடங்கள் மற்றும் அவர்களினால் தேர்தல் சட்டங்களை மீறி ஒட்டப்படும் சுவரொட்டிகள் மீது இவை சட்டவிரோதமானவை என லேபல்களை ஒட்டுவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கையெடுக்குமென ஆணைக்குழு தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
இன்று தேர்தல்கள் ஆணைக்குழுவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.


0 Comments