Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

வாக்களிக்காதவர்களுக்கு தண்டம்!

சில வெளிநாடுகளில் உள்ளதைப்போன்று வாக்களிக்காதவர்கள் தண்டப்பணம் செலுத்தும் சட்ட ரீதியிலான முறையொன்றை இலங்கையிலும் அறிமுகப்படுத்த வேண்டும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் மேலதிக ஆணையாளர் எம்.எம்.மொகமட் வாரமஞ்சரிக்குத் தெரிவித்தார்.
மொத்த வாக்காளர்களுள் 60 சதவீதமானவர்களே வாக்களிக்கின்றனர். ஆனால், மொத்த வாக்காளர்களும் வாக்களிப்பார்கள் என்ற அடிப்படையில் தேர்தல்கள் ஆணைக்குழு செலவு செய்கின்றது. இதனால், வீண் செலவு ஏற்படுகின்றது. எனவே, அவ்வாறு வாக்களிக்காதவர்களிடம் இந்தப் பணத்தை அறவிடுவதற்கான சட்ட ஏற்பாடு ஒன்று அவசியம் என்று மொகமட் தெரிவித்தார்.
அவுஸ்திரேலியா உள்ளிட்ட சில நாடுகளில் இவ்வாறான சட்டங்கள் இருக்கின்றன. அதுபோன்று இலங்கையில் வாக்காளர்களுக்குத் தண்டனை வழங்கும் சட்டங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.

Post a Comment

0 Comments