Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

சம்பந்தனின் வீடு முற்றுகை பலத்த பொலிஸ் பாதுகாப்பு

திருகோணமலையில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தனின் வீட்டை வேலையில்லா பட்டதாரிகள் இன்று முற்றுகையிட்டுள்ளனர். அரச நியமனம் கோரி சம்பந்தனின் வீட்டுக்கு முன்பாக
நூற்றுக்கணக்கான பட்டதாரிகள் ஒன்று கூடியுள்ளனர். எமக்கு அரச நியமனங்களை பெற்றுத்தருவதாக  இரா.சம்பந்தனும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் வாக்குறுதி வழங்கியிருந்த போதும் இதுவரை அது நடக்கவில்லை, சம்பந்தன் எம்மை ஏமாற்றி விட்டதாக முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட பட்டதாரிகள் தெரிவித்துள்ளனர்.  தொடர்ந்து தமக்கு நியமனங்கள் கிடைக்கும் வரை தொடர்ச்சியாக போராட்டங்களை முன்னெடுக்கப் போவதாகவும் எச்சரித்துள்ளனர். இதனால் சம்பந்தனின் வீட்டுக்கு பலத்த பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

Post a Comment

0 Comments