Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பில் பல கட்சிகள் கட்டுப்பணம் செலுத்தின

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளுராட்சிமன்ற தேர்தலுக்காக பல்வேறு கட்சிகள் கட்டுப்பணத்தினை செலுத்தின. கட்டுப்பணம் செலுத்துவதற்கான இறுதியான தினம் என்ற காரணத்தினால் பல்வேறு கட்சிகள் தங்களது கட்டுப்பணத்தினை செலுத்தியது.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி என்பன இன்று பகல் கட்டுப்பணத்தினை செலுத்தியது.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சார்பில் அதன் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் எஸ்.லலிந்திரன் தலைமையிலான அமைப்பாளர்கள்,மற்றும் உறுப்பினர்கள் கோறளைப்பற்று,ஏறாவூர்ப்பற்று,மண்முனைப்பற்று ஆகியவற்றுக்கான கட்டுப்பணத்தினை செலுத்தியது.
அதேபோன்று தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி இன்றும் மட்டக்களப்பு,ஏறாவூர் மத்தி நகரசபைக்கான கட்டுப்பணத்தினை செலுத்தியது.அதன் பொதுச்செயலாளர் பூ.பிரசாந்தன் கட்டுப்பணத்தினை செலுத்தினார்.
இதோபோன்று தமிழர் சுதந்திர ஐக்கிய முன்னணி இம்முறை கிழக்கு மாகாணத்தில் சுயேட்சைக்குழுவாக உள்ளுராட்சிமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ளதாக தமிழர் சுதந்திர ஐக்கிய முன்னணியில் தலைவருமான விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு,தேர்தல் திணைக்களத்தில் இன்று ஆதரவாளர்களுடன் வருகைதந்து கட்டுப்பணம் செலுத்திய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களிலும் இம்முறை சுயேட்சையாக களமிறங்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
DSC04119DSC04134DSC04140DSC04142

Post a Comment

0 Comments