மழை தொடர்ந்து பெய்யும் பட்ச்சத்தில் மண்சரிவு மண் மேடு இடிந்து விழுதல் பாறைகள் புரளுதல் நிலமை தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு கட்டிட அமைப்பு பொது மக்களுக்கு அறிவித்துள்ளது.
காலி களுத்துறை ஆகிய பிரதேசங்களில் சில இடங்களில் மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
புளத்சிங்கள அலவத்துறை மலையில் மண்சரிவு ஏற்பட்டதன் காரணமாக அலவத்துறை 17 குடும்பத்தைச் சேர்ந்த 76 பேர் அலவத்துறை தோட்ட வைத்தியசாலையில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
நேற்று மாலை 4.30 மணியளவில் மண்சரிவு ஏற்பட்டதனை அடுத்து பாறை புரண்டதினால் வீடுகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளன.


0 Comments