Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

இனவாதமும் மதவாதமும் இந்த நாட்டில் இருந்து களைந்தெறியப்படவேண்டும் -வியாழேந்திரன் எம்.பி.

இனவாதமும் மதவாதமும் இந்த நாட்டில் இருந்து களைந்தெறியப்படவேண்டும் என தெரிவித்த மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தன்னைப்போல் பிறரை பார்க்காத நேசிக்காத தன்மை இந்த நாட்டில் இருந்ததன் காரணத்தினாலேயே வடகிழக்கு இன்று யுத்த வடுக்களை தாங்கி நிற்பதாகவும் தெரிவித்தார்.
மட்டக்களப்பு பயனியர் வீதியில் உள்ள மதர்ஸ் கெயார் முன்பள்ளியின் வருடாந்த பரிசளிப்பு விழாவும் விடுகை கோள் விழாவும் நேற்று சனிக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.
மதர்ஸ் கெயார் முன்பள்ளியின் அதிபர் திருமதி நிர்ஜா ஜேசுதாசன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
சிறப்பு அதிதியாக கிழக்கு மாகாண பாலர் பாடசாலை பணியகத்தின் முன்னாள் தவிசாளர் பொன்.செல்வநாயகம் கலந்துகொண்டார். மதர்ஸ் கெயார் முன்பள்ளியின் ஆலோசகர் டாக்டர் அமரசிங்கம் உட்பட பலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இதன்போது மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்வுகள் நடைபெற்றதுடன் மாணவர்களுக்கான பரிசில்கள் வழங்கப்பட்டதுடன் இந்த ஆண்டுடன் முன்பள்ளி கல்வியை பூர்த்திசெய்த மாணவர்களுக்கு பட்டமளிப்பு நிகழ்வும் நடைபெற்றது.
இங்கு பாராளுமன்ற உறுப்பினர், கிழக்கு மாகாண பாலர் பாடசாலை பணியகத்தின் முன்னாள் தவிசாளர் பொன்.செல்வநாயகம் ஆகியோர் உரையாற்றினர்.
இங்கு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர்,
இன்று அரசாங்கம் திட்டமிட்டு கல்விக்கொள்கைகளைகொண்டுவருகின்றதே.அதற்கேற்றாற்போல் எமது பிள்ளைகளையும் திட்டமிட்டு கொண்டுவருவதன் மூலம் அவர்களை சர்வதேச தரத்திற்கு கொண்டுவரமுடியும்.
கடந்த கால யுத்ததினால் புலம்பெயர்ந்து ஐரோப்பிய நாடுகளில் வசிக்கும் எமது உறவுகளின் பிள்ளைகள் அங்குள்ள வெள்ளையர்களை பின்தள்ளி பல்வேறு துறைகளில் சாதனைகளை படைத்துவருகின்றனர்.வாய்ப்புகள் கிடைக்கும்போது ஆதனை சரியாக பயன்படுத்துகின்றார்கள். அங்கிருக்கின்ற கல்விமுறைகளை இங்கு அறிமுகப்படுத்தவேண்டும்.ஒட்டுமொத்ததில் எமது கல்விமுறை மாற்றப்படவேண்டும்.
நாங்கள் கல்வியால் வளர்ந்த கல்வியால் அடையாளப்படுத்தப்பட்ட சமூகமாவோம். தமிழர்களாகிய நாங்கள் கல்வியால் முழு இலங்கையையும் ஆண்டோம். தனி ஈழம் கேட்டு,வடகிழக்கு கேட்டு இன்று அதுவும் இல்லாத நிலையில் நாங்கள் இருக்கின்றோம்.
இலங்கையில் சகல அரசாங்க துறைகளிலும் எமது தமிழர்கள் இருந்தார்கள். மீண்டும் நாம் கல்வியால் எமது இருப்பை நிலைநிறுத்த வேண்டும். கல்வியாலும் பொருளாதார வளர்ச்சியாலும் மட்டுமே ஒரு சமூகத்தின் இருப்பை ஒரு தேசத்தில் தக்கவைத்துக்கொள்ள முடியும்.
பிள்ளைகளுக்கு நாங்கள் சரியான கல்வியை வழங்க வேண்டும். மறுக்கப்படுகின்ற கல்வி பறிக்கப்படுகின்ற உயிருக்கு சமமாகும். பெற்றோர்கள் தான் பிள்ளைகளுக்கு உன்னால் எதையும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையை கொடுக்க வேண்டும். ஒரு பிள்ளையின் திறமை சரியானமுறையில் அடையாளப்படுத்தப்பட்டு அந்த துறையில் அவர் செல்ல அனுமதிக்கப்படுவாரானால் அவர் அதில் சாதனையாளராக மாற்றம்பெறுவார்.
கல்வியுடன் இணைந்ததாக ஒழுக்கமும் மாணவர்களுக்கு கற்பிக்கப்படவேண்டும். இதுமிகமுக்கியமானதாகும். இந்த நாட்டை காலணித்துவ ஆட்சிக்கு பின்னர் மாறிமாறிஆண்டுவந்த தற்போது ஆண்டுகொண்டிருக்கின்ற அரச தலைவர்கள் எல்லாம் இனவாதிகள்,மதவாதிகள்,தங்களது சுயலாபத்திற்காக இனவாதத்தினையும் மதவாதத்தினையும் விதைப்பவர்கள்.
அதன்காரணமாகவே இந்த நாட்டில் அகிம்சை போராட்டம் ஆயுதப்போராட்டத்திற்கு சென்று இன்று அரசியல்போராட்டத்திற்கு வந்துள்ளோம்.இனவாதம் என்பதும் மதவாதம் என்பதும் இந்த நாட்டில் இருந்து முழுமையாக களைந்தெறியப்படவேண்டும்.அவ்வாறான தலைமைத்துவங்களை உருவாக்கவேண்டுமானால் அதனை சிறந்த கல்விமுறையுடாக மட்டுமே சாத்தியமாகும்.
இந்த நாட்டில் இடம்பெற்ற யுத்தினால் உயிர்களை இழந்துள்ளோம்,உடமைகளை இழந்துள்ளோம்.வடகிழக்கில் ஒரு இலட்சத்து 26ஆயிரம் குடும்பத்தினை தலைமைதாங்கும் தாய்மார்களை தாங்கியுள்ளது.40ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் உருவாக்கப்பட்டுள்ளனர்.11ஆயிரத்திற்கு மேற்பட்டபோராளிகள் என யுத்த வடுக்களை நாங்கள் சுமந்து நிற்கின்றோம்.இதற்கு காரணம் தன்னைப்போல் பிறரை பார்க்காத நேசிக்காத தன்மை இந்த நாட்டில் இருக்காத காரணமே இந்த நிலை ஏற்பட்டது.
எதிர்வரும் சந்ததியினரையாவது நல்ல சிந்தனையுடையவர்களாக,ஆரோக்கியமான சிந்தனையுடையவர்களாக,அனைவருக்கும் பயன்தரக்கூடியவர்களாக உருவாக்கப்படவேண்டும்.
DSC02645

DSC02652

DSC02654

DSC02666

DSC02670

DSC02672

DSC02681

DSC02731

DSC02736

DSC02744

DSC02770

DSC02789

DSC02792

DSC02807

DSC02821

DSC03073
DSC03088

Post a Comment

0 Comments