Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

பெப்ரவரி 10இல் தேர்தல்?

சகல உள்ளூராட்சி சபைகளுக்குமான தேர்தலை பெப்ரவரி 10ஆம் திகதி நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
வேட்புமனுவை கோருவதற்கான தினம் அறிவிக்கப்பட்டுள்ள 93 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலை ஜனவரி மாத இறுதியில் நடத்துவதற்கு ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருந்த போதும் மிகுதி 243 சபைகளுக்குமான தேர்தலை நடத்துவதில் காணப்பட்ட சட்ட சிக்கல்கள் தற்போது நீங்கியுள்ள நிலையில் சகல சபைகளினதும் தேர்தலையும் ஒரே நாளில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் இதன்படி தேர்தலை பெப்ரவரி 10ஆம் திகதி நடத்துவதற்கு ஆராயப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
உள்ளூராட்சி எல்லை நிர்ணயங்கள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலில் பிரச்சினைகள் காணப்படுவதாக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவொன்றை அடிப்படையாக கொண்டு குறித்த வர்த்மானி அறிவித்தலில் காணப்படும் 336 உள்ளூராட்சி சபைகளில் 203 சபைகள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல்களுக்கு எதிர்வரும் 4ஆம் திகதி வரை நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவை பிறப்பித்திருந்தது. எவ்வாறாயினும் கடந்த 30ஆம் திகதி மனுதாரர்களினால் தங்களின் மனுக்கள் நீதிமன்றத்திலிருந்து வாபஸ் பெற்றுக்கொள்ள நடவடிக்கையெடுக்கப்பட்டிருந்தமையினால் அது தொடர்பாக காணப்பட்ட சட்ட சிக்கல்கள் நீங்கியுள்ளது.
அத்துடன் 40 சபைகள் தொடர்பான வர்த்மானி அறிவித்தலில் சில அச்சுப்பிழைகள் காரணமாக அவற்றை திருத்த நடவடிக்கையெடுக்கப்பட்டிருந்தது. அவ்வாறாக திருத்தப்பட்ட வர்த்மானி மீண்டும் வெளியிடப்படவுள்ளது. இதனால் குறித்த 243 உள்ளூராட்சி சபைகளுக்குமான தேர்தலை நடத்துவதற்கு காணப்பட்ட சட்ட தடைகள் நீங்கியுள்ளதால் எல்லா சபைகளுக்கும் ஒரே நாளில் தேர்தலை நடத்தக் கூடிய நிலைமை உருவாகியுள்ளது. என்பது குறிப்பிடத்தக்கது. 

Post a Comment

0 Comments