Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பில் கழிவு சேகரிப்பு தொடர்பில் அறிவுறுத்தும் வேலைத்திட்டம்

மட்டக்களப்பு மாநகர சபை எல்லைக்குள் கழிவு சேகரிப்பு சேவை தொடர்பில் புதிய ஒழுங்கமைப்பு தொடர்பில் பொது மக்களையும் நகரில் உள்ள வர்த்தக நிலையங்களையும் அறிவுறுததும்வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.மட்டக்களப்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கழிவு சேகரிப்பு சேவை தொடர்பில் புதிய ஒழுங்குகள் தீர்மானிக்கப்பட்டு உக்கக் கூடிய கழிவுகள் உக்க முடியாத கழிவுகள் என முறையாக தரம் பிரித்து கழிவுச் சேகரிப்பு முறையினை நடைமுடைப்படுத்தப்பட்டு வருகின்றன
இது தொடர்பில் அறிவுறுத்தும் வகையிலான ஆரம்ப நிகழ்வு மட்டக்களப்பு மாநகர சபை ,கிழக்கு பல்கலைக்கழக சௌக்கிய பராமரிப்பு பீடம்,மட்டக்களப்பு லயன்ஸ் கழகம், பிரதேச செயலகம் மற்றும் லியோ கழகம் ஆகியன இணைந்து ஆரம்பித்துவைத்தன.
இது தொடர்பான ஆரம்ப நிகழ்வு இன்று மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக மண்டபத்தில் மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் என் .மணிவண்ணன் தலைமையில் நடைபெற்றது ,
இதன் ஆரம்ப கட்ட நடைமுறைப்படுத்தல் நிகழ்வு மட்டக்களப்பு புளியந்தீவு கிராம சேவை பிரிவில் முன்னெடுக்கப்பட்டன .
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் என் .மணிவண்ணன் . பிரதி ஆணையாளர் என் .தனஞ்சயன் , கிழக்கு பல்கலைக்கழக சௌக்கிய பராமரிப்பு பீடம் வைத்தியர் கே .அருளானந்தம் , மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வைத்தியர் .மதனழகன் ,மட்டக்களப்பு வர்த்தக சங்க தலைவர் கே.செல்வராஜா , லயன் செல்வேந்திரன் மற்றும் கிழக்கு பல்கலைக்கழக சௌக்கிய பராமரிப்பு பீடம் மாணவர்கள் , பொதுசுகாதார பரிசோதகர்கள் , கிராம சேவை உத்தியோகத்தர்கள் , சமுர்த்தி உத்தியோகத்தர்கள் , லியோ கழக உறுப்பினர்கள் , மாநகர சபை ஊழியர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டதுடன் கழிவுகள் தரம்பிரிப்பது தொடர்பிலான துண்டுப்பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டதுடன் ஸ்டிக்கர்களும் ஒட்டப்பட்டன.
DSC02146DSC02149DSC02163DSC02168DSC02171DSC02187

Post a Comment

0 Comments