நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலையினால் பொதுசந்தைகளுக்கு கொண்டுவரப்படும் மரக்கறி தொகைகளின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக புறக்கோட்டை மெனிங் பொதுச்சந்தை சங்கம் தெரிவித்துள்ளது.
இதனால் மரக்கறிகளின் விலை அதிகரித்துள்ளதாக இந்த சங்கத்தின் செயலாளர் காமனி ஹந்துன்கே தெரிவித்துள்ளார்.
மேலும் தம்புளை பொருளாதார மத்திய நிலையத்திற்கும் குறைந்தளவிலான மரக்கறிகளே கொண்டுவரப்படுவதாகவும், இவ்வாறு கொண்டுவரப்படுபவை தரம் மற்றும் போசனை குறைந்தவையாக இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


0 Comments