நாட்டில் சில நாட்களாக தொடரும் சீரற்ற கால நிலையினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தை தாண்டியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
கடந்த 29ஆம் திகதி முதல் நிலவிய கடும் காற்று மற்றும் மழையுடன் கூடிய கால நிலையினால் 16 மாவட்டங்களில் பாதிப்புக்கள் ஏற்பட்டிருந்தன. கொழும்பு , கம்பஹா , களுத்துறை , காலி , அம்பாந்தோட்டை , மத்தறை ,மொனாராகல , பதுளை புத்தளம் , குருநாகல் , நுவரெலியா , கண்டி ,மாத்தளை , கேகாலை , இரத்தினப்புரி மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களில் இவ்வாறாக பாதிப்புக்கள் ஏற்பட்டிருந்து.
இந்த மாவட்டங்களில் 31,165 குடும்பங்களை சேர்ந்த 106 ,076 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் கடும் காற்று , வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்களினால் 694 வீடுகள் முற்றாகவும் 25,117 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ள அனர்த்த முகாமைத்துவ நிலையில் இங்கு பாதிக்கப்பட்ட குடும்பங்களில் 1421 குடும்பங்களை சேர்ந்த 5435 பேர் 66 தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது


0 Comments